வலிமை படத்தில் இருந்து விலகினாரா யுவன் ? இப்போ இவர் தான் இசையமைப்பாளராம்.

0
7849
yuvan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டாராக ஜொலித்து கொண்டு இருப்பவர் நடிகர் அஜித் குமார். தல அஜித்தின் “வலிமை” படம் குறித்து பல தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வருடம் அஜித் அவர்களின் நடிப்பில் வெளிவந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றது. அதோடு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து தல அஜித்தை வைத்து உருவாகி வருகிற படம் தான் “வலிமை”. இந்த வலிமை படத்திற்கான பூஜைகள் எல்லாம் போடப்பட்டு படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி விட்டார்கள். இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவாளராக உள்ளார்.

-விளம்பரம்-
Image result for valimai yuvan

- Advertisement -

அதோடு நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படத்திலும் பணியாற்றுகிறார்கள் என தெரிய வந்து உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியிலும், உற்சாகத்திலும் உள்ளனர். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கு இசை அமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இந்த வலிமை படத்திற்கும் இசையமைக்கிறார் என்று ஆரம்பத்தில் கூறி இருந்தார்கள். ஆனால், தற்போது திடீரென்று அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் சில காரணங்களால் யுவன் ஷங்கர் ராஜா அவர்கள் இந்த வலிமை படத்தில் பாட முடியாமல் வெளியேறி விட்டதாகவும், அவருக்கு பதிலாக டி. இமான் படத்தில் பாட இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆனால், இதுவரை யுவன் தான் இந்த படத்திற்கான இசை வேலைகளை ஆரம்பித்து உள்ளார்.

இதையும் பாருங்க : சுனைனாவிற்கு திருமணம் முடிந்துவிட்டதா ? நேரலையில் அவரே சொன்ன விளக்கம்.

மேலும், டி இமான் என்று வரும் தகவல் எல்லாம் முற்றிலும் வதந்தி என்றும் ஒரு பக்கம் கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்பதை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும், டி.இமானும் மற்றும் வலிமை படத்தின் படக்குழுவினரும் சொன்னால் மட்டும் தான் தெரியும். அஜித்தின் வலிமை படம் தொடங்க போகிறது என்று சொன்ன நாளில் இருந்து இப்போது வரை பல வதந்திகள், பல தகவல்கள் என இணையங்களில் வந்து கொண்டே இருக்கின்றது. மேலும், சமூக வலைதளங்களிலும் வலிமை படத்திற்காக ஹாஸ்டேக்கை உருவாக்கி அதில் அஜீத்தின் வலிமை சம்பந்தப்பட்ட விஷயங்களை பகிர்ந்து வருகிறார்கள் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Image result for valimai yuvan

தற்போது வரை வலிமை படத்தின் கதாநாயகி குறித்து எந்த தகவலும் வரவில்லை. சில படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த அஜித் அவர்கள் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்துடன் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் சொல்லப்படுகிறது. இந்த படத்தில் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது.

இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படம் முற்றிலும் மாறுபட்ட கதைக்களமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர் ரசிகர்கள். வலிமை படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்து உள்ளார்கள்.

Advertisement