இதனால் தான் நான் குண்டாக ஆகிவிட்டேன்.! உடல் எடை பற்றி உண்மையை சொன்ன நித்ய மேனன்

0
1327
nithya-menon

பொதுவாக ஹீரோயின்கள் அனைவரும் ஒல்லியான தோற்றத்தை பெற வேண்டும் என்று பல உடற்பயிற்சிகலை மேற்கொள்வார்கள்.ஆனால் சமிபத்தில் வெளியான நித்யாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு குண்டா என ஷாக் ஆகி இருந்தனர். ஆனால் அதனை பற்றி அவர் கூலாக ஒரு பதில் கூறியுள்ளார்.

nithya-menon-fat

சமீபத்தில் தமிழில் வெளியான இளையதளபதி விஜய் நடித்த “மெர்சல்” படத்தில் நடித்தவர் நடிகை நித்யா மேனன். கன்னட மொழி படங்களில் அறிமுகமான இவர் தமிழில் வெளிவந்த “18”0 படத்தில் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

தமிழிலும் பல ரசிகர்களை கொண்டுள்ள நித்யாமேனன் இயற்கையாகவே சப்பியான தோற்றத்தை கொண்டவர். அதனால் ஒல்லியான ஹீரோயின்கள் மத்தியில் தனியாக தெரிந்தார். சமிபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நித்யாமேனினின் தோற்றத்தை பார்த்து பலரும் வியந்துள்ளனர். இதற்கு காரணம் ஏற்கனவே சப்பி லுக் கொண்டுள்ள நித்யாமேனன் தற்போது உடல் எடை அதிகரித்து மேலும் குண்டாகியுள்ளார்.

nithya menon

ஆனால் இதை பற்றி அவர் தெரிவிக்கையில் “எனக்கு சாப்பிடுவது மிகவும் பிடிக்கும், ஷூட்டிங் இல்லாத நேரங்களில் நான் நன்றாக சாப்பிட்டு, நன்றாக உறங்குவேன். அதனால் என் எடை கூடி விடுகிறது,என்னால் மற்றவர்களை போல உணவு கட்டுப்பாடு இருந்து உடற்பயிற்சிகளை செய்து கொண்டே இருக்க முடியாது” என்று தன்னை கிண்டல் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.