5 வயதில் இருந்து நடிப்பு, 40 வருட சினிமா வாழ்க்கை, இப்போ சீரியல் – 90ஸ் நடிகை நித்யா ரவீந்தரின் அறிந்திராத பக்கம்.

0
1340
Nithya
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலகட்டத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்தியா ரவீந்திரன். இவர் நடிகை மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட், பாடகி என பன்முகம் கொண்டவர். இவர் குழந்தை நட்சத்திரமாக மேடை நாடகங்களில் நடித்து மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிறகு சினிமாவில் நடித்து அசத்தினார். அதனை தொடர்ந்து இவர் ரஜினி,கமல் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் கன்னடம், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

பிறகு சினிமாவில் வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் சின்னத்திரை சீரியல்களில் நடித்தார். மேலும், பல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்கிறார் நித்யா ரவீந்திரன். தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நம்ம வீட்டு மீனாட்சி என்ற தொடரில் நடித்து வருகிறார். சமீபத்தில் தனுஷின் நடிப்பில் வெளியாகி இருந்த அட்ரங்கி ரே படத்தில் தனுஷின் அம்மாவாக நித்யா நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் கடந்த சில ஆண்டுகளாகவே எப்எம் ஒன்றின் டைரக்டராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

- Advertisement -

நித்யா ரவீந்திரன் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய சிறுவயது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பது, எனக்கு சின்ன வயதில் இருந்தே மியூசிக் என்பது ரொம்ப பிடிக்கும். அதனால் தான் எனக்கு பாடுவது பிடிக்கும். பொழுதுபோக்குக்காக நான் அப்பப்ப பாடுவேன். நான் என்னுடைய சின்ன வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். ஐந்து வயதிலிருந்தே மேடை நாடகம் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பள்ளி பருவம் பற்றி நித்யா ரவீந்திரன் கூறியது:

பள்ளி பருவத்தில் இருக்கும்போது நடிப்பேன், படிப்பேன். 40 வருடங்களுக்கு முன்னாடி எல்லாம் நடிக்கிற குழந்தைகள் என்றாலே மற்றவர்களுடன் பழக தயங்குவார்கள். அவர்களுடைய குழந்தைகளை எங்களுடன் பழக விட மாட்டார்கள். அவள் நல்லா நடிக்கிறா, அவள் பொய் பேசுவாள் என்றெல்லாம் சொல்லித் தருவார்கள். அந்த குழந்தைகள் என்னோட வயது என்பதால் என்னிடம் எங்கள் அம்மா இப்படி எல்லாம் சொல்கிறார்கள் என்று உண்மையை போட்டு உடைத்து விடுவார்கள்.

-விளம்பரம்-

நித்யா ரவீந்திரன் லட்சிய கனவு:

அவ்வளவு சின்னத்தனம் புத்தி கொண்டவர்கள் அப்போது இருந்திருக்கிறார்கள். பள்ளி முடிந்ததும் மற்ற குழந்தைகள் விளையாட போவாங்க. நான் நாடகத்துக்கு நடிக்கப் போய் விடுவேன். அப்படியே என்னுடைய வாழ்க்கை ஓடியது. நாடகத்திலிருந்து மீடியாக்குள் நுழைந்தேன். அங்கே நடிப்பை விட நமது எக்ஸ்பிரஸனை குரலில்தான் வெளிப்படுத்துணும். அப்பா சொன்னதால் தான் நான் சினிமாவில் நடிக்க வந்தேன். நான் கிறிஸ்டியன் பள்ளியில் படித்தேன். அப்போ என்னோட லட்சியமே கன்னியாஸ்திரியாகி குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கணும் என்பது தான் என்று நினைத்தேன்.

நித்யா ரவீந்திரன் சினிமாவுக்குள் நுழைந்தது:

ஆனால், அப்பா சொன்னதால் நான் சினிமாவுக்குள் நுழைந்தேன். இப்போது நான் படங்கள், சீரியல் மட்டும் இல்லாமல் தமிழ் எப்எம் ரேடியோவுக்கு இயக்குனராகவும் இருக்கிறேன். இது துபாயில் உள்ள பண்பலை. இதில் நான் ஏழு வருஷமாக வேலை செய்து கொண்டிருக்கிறேன். குடும்பமும் கேரியரும் நன்றாக தான் சென்று கொண்டிருக்கின்றது என்று மகிழ்ச்சியாக கூறியிருந்தார். இப்படி நித்திய அளித்திருக்கும் பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement