கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் #metooo மூமென்ட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. பின்னணி பாடகி சின்மயி, பாடலாசிரியர் வைரமுத்து மீது தொடுத்த பாலியல் புகாரை அடுத்து பல பிரபலங்கள் மீதும் அடுத்தடுத்து #metoo புகார் வெடித்தது. இந்த #metoo புகாரில் நம்பமுடியாத பல சினிமா பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் பல்வேறு தமிழ் நடிகைகள் கூட தங்கள் வாழ்க்கையில் நடத்த Metoo அனுபவங்கள் பற்றி வெளிப்படையாக பேசினார்கள். இப்படி ஒரு நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் பிரபல நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை நிவேதா பெத்துராஜ் தனது வாழ்வில் நடந்த metoo அனுபவம் பற்றி பேசியுள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை நிவேதா பெத்துராஜ். தற்போது இவர் தன்னுடைய சிறு வயது அனுபவங்களை குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆர்வமாக இதை ஷேர் செய்தும்,லைக் செய்தும் வருகிறார்கள். நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி என்னும் ஊரை சேர்ந்தவர். இவருடைய தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார்.
இதையும் பாருங்க : கௌண்டமணியுடன் இருக்கும் இந்த குட்டி பையன் யார் தெரியுமா ? இப்போ எப்படி இருக்கார் பாருங்க.
நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள் 2016 ஆம் ஆண்டு திரையுலகிற்கு வெளியான ஒரு நாள் கூத்து என்ற திரைப் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து இவர் டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன்,பொதுவாக எம்மனசு தங்கம், சங்கத்தமிழன் போன்ற பல படங்களில் நடித்து இருக்கிறார்.தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நிவேதா பெத்துராஜ், தனக்கு நேர்ந்த metoo அனுபவம் பற்றி பேசியுள்ளார். அதில், மீடூ பிரச்னையில் நானும் சிக்கியிருக்கிறேன். ஒரு பார்ட்டிக்கு சென்றபோது அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையைப் பூர்வீமாக கொண்ட தமிழ்ப் பெண். வெட்கம், பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை. தவறு என்மீது தான். நான் அந்த பார்ட்டிக்கு போயிருக்கக் கூடாது.போகாமலிருந்திருந்தால், அந்த கசப்பான அனுபவத்தைத் தவிர்த்திருக்கலாம். பெண்களிடம் யாராவது தவறாக நடக்க முயன்றால் அந்த இடத்திலே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இப்போது, அதுபோல சம்பவம் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். அந்த விஷயத்தில் நான் தெளிவாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.