சன் தொலைக்காட்சியில் கடந்த 2000ம் ஆண்டு ஒளிபரப்பான ராஜராஜேஸ்வரி தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் அறிமுகமானார் நடிகை நிவேதா தாமஸ். அதன் பின்னர் மை டியர் பூதம் தொடரிலும் நடித்திருந்தார். தொடர்ந்து சின்னத்திரையில் நடித்து வந்த நிவேதா தாமஸ் விஜய் நடிப்பில் வெளியான ‘குருவி’ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் போராளி, நவீன சரஸ்வதி சபதம், ஜில்லா போன்ற படங்களில் நடத்த நிவேதா தாமஸ் பாபநாசம் படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தார்.
பாபநாசம் படத்துக்குப் பின்னர் இவருக்கு தமிழில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.ஆனால், ஜாக்பாட் அடித்தது போல சூப்பர் ஸ்டார் நடிப்பில் சமீபத்தில் வெளியான தர்பார் படத்தில் இவருக்கு சூப்பர் ஸ்டாரின் மகளாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.இந்த படத்தில் இவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் இந்த படத்தில் நயன்தாராவை விட இவர்தான் சூப்பர் ஸ்டாருடன் அதிக காட்சிகளில் தோன்றி இருந்தார்.
மிகவும் இளம் நடிகை என்பதால் இவருக்கு முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் தெலுங்கில் படு பிசியான நடிகையாக நடித்து வருகிறார். மேலும், தற்போதுள்ள நடிகைகள் தங்களது உடலை ஒல்லியாக வைத்து வருகின்றனர். இதனால் நிவேதா தாமஸும் தனது உடலைக் குறைப்பதற்காக கடுமையாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அடிக்கடி ஒர்க் அவுட் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர் ஒருவர், நான் உங்கள் தீவிர ரசிகன், நீங்கள் பதிவிட்ட மோசமான புகைப்படம் இதான் என்று வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.