7 வயதில் பாலியல் தொல்லை.! 16 வயதில் என்னை கற்பழித்தார்கள்..! பிரபல தொகுப்பாளினி அதிர்ச்சி தகவல்

0
268
padhma

சினிமா துறை பொறுத்தவரை பெண்களுக்கு எதிராக நடைக்கும் பாலியல் தொல்லைகள் ஏராளம். அந்த வகையில் பிரபல அமெரிக்க தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வரும் 48 வயது நிரம்பிய பத்மா லட்சுமி என்பவர் 16 வயதில் கற்பழிக்கபட்டதாக வெளியாகியுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

padma-lakshmi

இந்திய வம்சா வழியை சேர்ந்த இவர் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தொலைக்காட்சி தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பத்மா லட்சுமி கூறுகையில், எனக்கு 16 வயது இருக்கும் போது என்னுடைய boy friend வுடன் டேட்டிங் சென்றிருந்தேன்.

நாங்கள் இருவரும் வெளியில் சுற்றிவிட்டு அபார்ட்மெண்டிற்கு சென்ற போது நான் மிகவும் சோர்வாக இருந்தேன். நான் அறையில் சென்று படுத்துக் கொண்டிருந்த போது என்னை எனது boy friend கற்பழித்து கொண்டிருந்தான். நான் வலியால் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்தும் அதிர்ச்சியடைந்து, அவனை தட்டிவிட முயன்றேன். ஆனால், அவன் என்னை விடாமல் கற்பழித்தான்.

Padma-Lakshmi

இதனை பற்றி நான் யாரிடமும் சொல்லவில்லை, ஏனெனில் எனக்கு 7 வயது இருக்கும் போது எனது அம்மாவின் உறவினர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டபோது நான் என்னுடைய பெற்றோரிடம் சொன்னேன். அவர்கள் என்னை இந்தியாவிற்கு அனுப்பிவிட்டார்கள், இதனால் எங்கே என்னுடைய boy friend என்னை கற்பழித்த விஷயத்தை சொன்னால் என்னை மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பிவிடுவார்கள் என்று பயந்து நான் யாரிடமும் சொல்லாமலே மறைத்துவிட்டேன் என்று கூறியுள்ளார் பத்மா லட்சுமி.