தற்கொலைக்கு முன்பாக சகோதரிக்கு வீடியோ கால். பணப்பிரச்னையால் நடிகை எடுத்த கோர முடிவு.

0
21767
padmaja
- Advertisement -

சமீப காலமாகவே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொள்கிறார்கள். இது கோலிவுட்டில் தொடங்கி பாலிவுட் வரை என அனைத்து சினிமா திரை உலகிலும் நடந்து கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது நடிகை பத்மஜா அவர்கள் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவொற்றியூர் காலடி பேட்டையில் வசித்து வந்தார் பத்மஜா. இவருக்கு தற்போது 23 வயது தான் ஆகிறது. இவர் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையிலும் துணை நடிகையாக நடித்து உள்ளார். இவர் தனது கணவன் மற்றும் மகனுடன் திருவலூரில் வசித்து வந்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for actress padmaja death

- Advertisement -

இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு 2 வயதில் மகன் இருக்கிறான். பின் இவர்களுக்கிடையே அடிக்கடி சின்னச் சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல பிரச்சனைகளும் வந்துள்ளதாம். இதனால் தங்களது இரண்டு வயது குழந்தையை கூட உறவினர் வீட்டில் விட்டு விட்டு வார இறுதியில் மட்டும் இருவரும் சென்று குழந்தையை பார்த்துவிட்டு வருவார்களாம். மேலும், தனது கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் சென்று மாதம் தனது கணவனிடமிருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து உள்ளார் பத்மஜா.

பத்மஜா கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தான் திருவொற்றியூருக்கு வந்து உள்ளார். இவர் தங்கியிருந்த வீட்டில் இரண்டு நாட்களாக மின் விளக்குகள் அணைக்கப் படாமல், வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்தது. இதனை அறிந்த வீட்டின் உரிமையாளர் சந்தேகத்துடன் வீட்டின் ஜன்னலில் இருந்து பார்த்து உள்ளார். அப்போது நடிகை பத்மஜா மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. உடனடியாக அவர் திருவெற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து பத்மஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உள்ளார்கள். இளம் நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-

தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கடன் காரணமாக பத்மஜா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து பத்மஜாவின் செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி உள்ளார்கள். மேலும், நடிகை பத்மஜா தற்கொலை செய்வதற்கு முன் ஒரு வீடியோவை பெங்களூரில் உள்ள தன்னுடைய சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். இவர் தற்கொலை செய்துகொள்வதற்கு முன் தன்னுடைய சகோதரிக்கு வீடியோ கால் செய்துள்ளார். அப்போது நிதி நெருக்கடி குறித்து தெரிவித்தார் என்று போலீசார் கூறியுள்ளனர். அதோடு விசாரணையில் இவர் உறவுக்கார வாலிபருடன் வசித்து வந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தற்கொலை குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

Advertisement