தேசிய விருது பெற்ற பிரபல தனுஷ் பட நடிகையின் கார் மோதி விபத்து..! புகைப்படம் உள்ளே

0
2284
Parvathy menon
- Advertisement -

கேரளாவில் சாலையில் ஏற்படும் விபத்துக்கள் கடந்த சில மாதங்களாகவே அதிகரித்து வருகிறது. அதனை குறைக்க கேரளா போக்குவரத்துக்கு காவல் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் கூட கேரள பெண் செய்தியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.தமிழில் “பூ” “மரியான்” போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகை பார்வதி மேனன் கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு கார் விபத்தில் சிக்கியுள்ளார். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி தப்பியுள்ளார் நடிகை பார்வதி நாயர்.

-விளம்பரம்-

mariyaan

- Advertisement -

கடந்த திங்கள்கிழமை இரவு கேரளா, ஆலப்புழாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் தனது ஷிப்ட் காரில் சென்றுள்ளார். அப்போது அந்த கார் “கொம்மடி” என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த போது தீடிரென்று விபத்துக்குள்ளது , அதிர்ஷ்டவசமாக நடிகை பார்வதி காரின் பின்புறம் அமர்த்திருந்ததால் காயம் ஏதும் ஆகாமல் தப்பிவிட்டார்.

தகவலிருந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலப்புழா காவல் துறை விபத்துக்குள்ளான காரை மீட்டது. இந்த விபத்து எதிர்பாராத விதமாக நடந்ததால் எந்த ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லையாம்.மேலும் பார்வதி தரப்பும் எந்த ஒரு புகாரையும் காவல்துறையில் அளிக்கவில்லையாம்.

-விளம்பரம்-

parvathy

கடந்த 2017 ஆம் மலையாளத்தில் வெளியான,மகேஷ் நாராயணன் இயக்கிய ‘டேக் ஆப்’ படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்த ஆண்டு சில மாதங்களுக்கு முன்னர் வெளிவந்த அருவி படத்தில் கூட இவரை தான் நடிக்கவைக்க முதலில் அணுகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement