தேசிய கொடியை அவமதிக்கும் செயல் – பார்வதி நாயரின் சுதந்திர தின போஸ்டால் எழுந்த சர்ச்சை.

0
4411
parvathy
- Advertisement -

நாடு முழுவதும் நேற்று 75 சுதந்திர தினம் கொண்டாடபட்ட நிலையில் நடிகை பார்வதி தேசிய கொடியை அவமதித்துவிட்டார் என்ற சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் அஜித் அருண்விஜய் த்ரிஷா, அனுஷ்கா ஷெட்டி, பார்வதி நாயர் ,விவேக் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தார்கள். இதில் பார்வதி நாயர் மட்டும் தமிழ் சினிமாவிற்கு புதுமுகமாக அறிமுகமாகி இருந்தார்.

-விளம்பரம்-

தனது முதல் படத்திலேயே அஜித் படத்திலேயே நடித்த அதிர்ஷ்டம் இவருக்கு கிடைத்திருந்தது. அதேபோல இந்த படத்தின் மூலம்தான் அருண் விஜய்க்கு ஒரு மாபெரும் திருப்பு முனையாக அமைந்து இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.என்னை அறிந்தால் படத்திற்கு முன்பாகவே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர்.

- Advertisement -

என்னை அறிந்தால் படத்திற்கு பின்னர் இவர் உத்தமவில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர், வெள்ள ராஜா போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் பார்வதி அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் சமீப காலமாக படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் நேற்று சுதந்திர தினத்தை முன்னிட்டு நடிகை பார்வதி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

அதில்,தேசிய கொடியை துப்பட்டாவாக அணிந்து அதை காற்றில் வீசி பறக்கவிட்டு போஸ் கொடுத்து தனது சுதந்திர தின வாழ்த்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பார்வதி, தேசியக் கொடியை அவமதித்து துப்பட்டாவாக அணிந்ததாக கூறி அவரது பதில் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சிலர் பழைய படத்தை மீண்டும் தூசி தட்டி பார்வதி பதிவு செய்துள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர். இதே புகைப்படத்தை தான் கடந்த ஆண்டு சுதந்திர தினத்தன்றும் பார்வதி பதிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement