அஜித் தான் என் முதல் காதலர்..!அஜித்துடன் நடித்த நடிகை ஓபன் பேட்டி..!

0
284
Ajith

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் கோடிக்கான ரசிகர்களை கொண்ட ஒரு உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். பெரும்பாலான நடிகர்கள் கூட இவரது ரசிகர்களாகவே இருந்து வருகின்றனர். மேலும், நடிகைகளுக்கு பெரிதும் பிடிக்கும் நடிகர் என்றால் அது அஜித்தாக தான் இருக்கும்.  

parvathinayar

இந்நிலையில் நடிகை பார்வதி நாயர், அஜித் தான் தனது முதல் காதலர் என்று கூறியுள்ளார். மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பார்வதி நாயர்.தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில் ‘ படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் கால் பதித்தார் பார்வதி நாயர்.

அதன் பின்னர் தமிழில் அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து உத்தம வில்லன் , என்கிட்டே மோததே, நிமிர் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் சேதுபதி நடித்துள்ள சீதக்காதி படத்திலும் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பார்வதி நாயர் அஜித்துடன் என்னை அறிந்தால் படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறியுள்ளார். அப்போது தனது முதல் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்திருந்த போது , அஜித் தான் எனது முதல் காதலர் என்றும் டீனேஜ் வயது முதல் அவர் மீது தனக்கு காதல் இருந்ததாகவும்  கூறியிருக்கிறார் நடிகை பார்வதி நாயர்.