தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் பார்வதி திருவோத்து. இவர் மலையாள தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளராக தான் தன்னுடைய கேரியரை தொடங்கினார். அதற்கு பின் இவர் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழில் 2008 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த பூ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார்.

அதை தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்திருந்தார். இருந்தாலும் இவருக்கு தமிழில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதை அடுத்து இவர் மலையாளம் மொழியில் தான் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அதிலும் இவர் பெண்ணுரிமை, அரசியல், சமத்துவம் போன்ற துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இவருடைய நடிப்பிற்கு பல விருதுகளும் கிடைத்திருக்கிறது. கிட்டத்தட்ட இவர் 15 வருடங்களுக்கு மேலாக நடித்து கொண்டு இருக்கிறார்.
பார்வதி குறித்த தகவல்:
கடந்த ஆண்டு இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான தங்கலான் படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை அடுத்து தற்போதும் இவர் படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் தன்னுடைய குழந்தை பருவத்தில் நடந்த கசப்பான அனுபவம் தொடர்பாக நடிகை பார்வதி கூறியிருந்தது, எனக்கு அப்போது சின்ன வயது. என்ன நடக்கிறது என்று கூட எனக்கு அப்போது தெரியாது.

பார்வதி பேட்டி:
ரயில்வே நிலையத்தில் அம்மாவை விட்டுட்டு அப்பாவுடன் நான் திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் என்னுடைய மார்பில் அடித்துவிட்டார். அது தொடுவது போலவே இல்லை. என்னை அடைந்தது போல இருந்தது. அப்போது நான் குழந்தையாக இருந்தேன். அந்த வலியை இன்றும் நினைவில் வைத்திருக்கிறேன். என் அம்மா தெருக்களில் நடக்கும் போது எப்படி நடக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக் கொடுத்தார். கடை ஜன்னல்களில் பொருள்களை பார்க்காதே. ஆண்களின் கைகளை பார்த்துக் கொண்டே நடக்க வேண்டும்.

சிறுவயது அனுபவம்:
ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படி கற்றுக் கொடுக்க வேண்டிய சூழலை கற்பனை செய்து பாருங்கள். ஆண்களிடம் இருந்து பல சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். ஒருவர் தன்னுடைய வேட்டியை தூக்கி அவருடைய உறுப்பை காட்டிக் கொண்டிருப்பார். அப்போது எனக்கு என்ன நடக்கிறது என்று கூட சுத்தமாக புரியாது. பல ஆண்டுகள் கழித்து அதை திரும்பிப் பார்க்கும்போது இவ்வளவு மோசமான அனுபவங்களை நம் வாழ்க்கையில் கடந்து வந்தோமா? என்ற அளவிற்கு வேதனை அளிக்கிறது. இது என் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று எமோஷனலாக பேசியிருக்கிறார்.






