நடிகை பார்வதி நாயருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகையாக திகழ்பவர் பார்வதி நாயர்.
இவர் கேரளாவை சேர்ந்தவர். இருந்தாலும் இவர் பிறந்து வளர்ந்தது எல்லாமே அபுதாபியில் தான். இவருடைய தந்தை துபாயை சேர்ந்த தொழிலதிபர். பார்வதியின் தாய் கல்லூரி பேராசிரியர். இவருடைய இளைய சகோதரர் ஷங்கர்.

ஐபிஎல் அணியின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
பள்ளிப்படிப்பை முடித்த பிறகு பார்வதி நாயர் தன்னுடைய 15 வயதிலேயே மாடலிங் துறையில் நுழைந்துவிட்டார். அதை தொடர்ந்து இவர் மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார். கல்லூரியில் படிக்கும் போது இருந்தே இவருக்கு மாடல் துறையில் அதிக ஆர்வம்.
பார்வதி நாயர் கேரியர்:
அதனால் தான் இவர் கர்நாடகாவின் மைசூர் சாண்டல் சோப்பின் அம்பாசிடராக இருந்தார். அதற்குப்பின் இவர் நேவி குயின் என்று அழகுப் போட்டியில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார். அதன்பின் மிஸ் கர்நாடகா என்ற அழகி போட்டியிலும் கலந்து கொண்டு முதல் பரிசை வென்றிருந்தார். அதனை தொடர்ந்து பெமினா மிஸ் இந்தியா பேஜெட்டாக கலந்து கொண்டு ஸ்டேட் லெவலில் தேர்வாகியிருந்தார். அதன் பின் இவர் நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

பார்வதி நாயர் திரைப்பயணம்:
2012 ஆம் ஆண்டு மலையாள படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் அறிமுகம் ஆகியிருந்தார். அதை தொடர்ந்து இவர் அடுத்தடுத்து மலையாள படங்களில் நடித்து வந்தார். அதற்கு பின் இவர் 2014 ஆம் ஆண்டு ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார். அதற்குப்பின் 2015 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் வில்லன் அருண் விஜய்க்கு ஜோடியாக பார்வதி நாயர் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

பார்வதி நாயர் படங்கள்:
இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதும் இவருக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து இவர் தமிழில் உத்தம வில்லன், மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, என்கிட்ட மோதாதே, நிமிர்,
சீதக்காதி போன்ற பல படங்களில் நடித்திருந்தார். கடைசியாக இவர் தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியாகியிருந்த கோட் என்ற படத்தில் ஜூனியர் சாட்ஸ் ஆபிஸர் என்ற ரோலில் நடித்திருந்தார். இதை தொடர்ந்து இவர் தமிழ், கன்னடம், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.

பார்வதி நாயர் நிச்சயதார்த்தம்:
அந்த வகையில் தற்போது இவர் ஆலம்பனா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கூடிய விரைவிலேயே வெளியாக இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் பார்வதி நாயருக்கு கூடிய விரைவிலேயே திருமணம் நடைபெற இருக்கும் தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, இவர் சென்னையில் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்களின் நிச்சயதார்த்தம் தற்போது எளிமையாக நடந்து முடிந்திருக்கிறது. கூடிய விரைவிலேயே திருமணம் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.






