பொதுவாக ஆண்களை விட பெண்களுக்கு வாழ்நாள் அதிக என புள்ளி விவரங்கள் சொல்லுகிறது. இருந்தும் சில சமயங்களில் பெண்களும் வயது முதிர்ச்சியினால் ஆண்களுக்கு முன்னரே இறந்துவிடுகின்றனர். அதிலும் சரியாக சராசரி வாழ்க்கை ஆயுகாலம் தாண்டாமல் 30 வயதிற்குள் இறந்து போவதெல்லாம் மிகக் கொடுமை. அப்படியாக 30 வயதிற்குள் பல்வேறு காரணத்தால் இறந்து போன தமிழ் நடிகைகளை பார்ப்போம்.

நடிகை சோபனா:

சின்னத்திரையில் கலக்கியதன் மூலம் பெரிய திரையில் ஓர் இடத்தைப் பிடித்தவர் சோபனா. சின்னத்திரையை தொடர்ந்த வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி நடிகையாக ஜொலித்த இவர் அடுத்த கோவை சரளா ரேஞ்சுக்கு வந்திருக்க வேண்டியவர். இவருக்கு வாழ்க்கை சோகத்தில் அமைந்ததால் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.

Advertisement

நடிகை மோனால்:

சிம்ரனின் தங்கையான இவர் அவரைப் போலவே தமிழில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். தமிழில் பார்வை ஒன்றே போதுமே, சமுத்திரம் போன்ற படங்களில் நடித்து இருந்தார். ஆனால், திடீரென தற்கொலை செய்துகொண்ட இவர், அதற்கான காரணமாக எழுதி வைத்து ‘தன் வாழ்க்கையில் நல்ல ஆண்களையே பார்க்கவில்லை’ என்பது தான். இவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக சிம்ரன் கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஷோபா :

தமிழில் 1965 ஆம் ஆண்டு வெளியான ‘நானல்’ என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் ஷோபா. அதற்கு பிறகு இவர் உத்ராத ராத்திரி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின் இவர் அச்சாணி, நிழல் நிஜமாகிறது, ஒரு வீடு ஒரு உலகம் போன்ற பல படங்களின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மகேந்திரனின் முள்ளும் மலரும் படம் மூலம் சோபாவுக்கு திரை உலகில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி தந்திருந்தது. 1980 ஆம் ஆண்டு திடீரென்று சோபா தற்கொலை செய்து கொண்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அப்போது அவருக்கு வெறும் 18 வயது தான்.

Advertisement

நடிகை பிரதியுஷா:

தமிழில் கடந்த 2000ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியான ‘மனுநீதி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர் அதன் பின்னர் சூப்பர் குடும்பம், தவசி போன்ற படங்களில் நடித்து இருந்தார். இவர் ஜூஸில் விஷம் கலந்து பொது இடத்தில் காருக்குள்ளேயே அமர்ந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இவரும் இவருடைய காதலரும் தற்கொலை செய்து கொள்ள திட்டம் தீட்டினார். அதிர்ஷ்ட்டவசமாக அவரது காதலர் உயிர் தப்பினார்.

Advertisement

ஜெயலட்சுமி :

எம்.ஜி.ஆர் காலத்து நடிகையான கே பாலசந்தர் இயக்கத்தில் வெளியான அவள் ஒரு தொடர்கதை படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இதனை தொடர்ந்து குறுகிய காலத்தில் அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். தமிழில் ரஜினியுடன் முள்ளும் மலரும், காளி போன்ற படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் கொடிகட்டி பறந்த இவர் தனது உடல் நலக் குறைவாள் தனது 22 வயதிலேயே இறந்து போனார்.

நடிகை சபர்ணா:

தொலைக்காட்சியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி பின்னர் சுந்தர் சியின் ஆயுதம் செய்வோம், விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மதுரவாயலிலுள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்ட்டார். அவரது வீட்டின் கதவு 3 நாட்களாக திறக்கப்படவில்லை என்றும்  துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் அளித்தனர். பின் போலீசார் வந்து உடலை மீட்டனர். இறப்பதற்கு முன்பு சபர்ணா கடிதம் எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். ஆனால் இன்னும் அதை வெளியிடவில்லை. 

Advertisement