மருத்துவ வசதி கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரர் மரணம். (காலை முதல் அவர் உதவி கேட்டு போட்ட ட்வீட்)

0
574
pia-pajpee

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் பல்வேறு பிரபலங்களையும் இந்த கொடிய வைரஸ் விட்டுவைக்கவில்லை. பாலிவுட்டின் டாப் ஸ்டாரான அமிதாப் பச்சன் மற்றும் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி மலையாள நடிகர் பிருத்விராஜ் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனுமான நடிகர் ராம்சரண் நடித்த ரகுள் பிரீட் சிங் நிக்கி கல்ராணி தமன்னா என்று பல்வேறு தளங்கள் கொரோனா தொட்டால் பாதிக்கப்பட்டு பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார்கள்.

கொரோனா இரண்டாம் அலைக்கு இடையில் பல்வேறு நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் பல்வேறு இடங்களில் உள்ள முகாம்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கொரோனா நோய் பாதிக்கப்பட்ட பலர் ‘ரெம்டெசிவிர் ‘ மருந்திற்காக பல மணி நேரம் காத்துகொண்டு இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் கொரோனா பாதிப்பால் அவதிப்பட்டு வந்த நடிகை பியாவின் சகோதரர் மரணமடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

விஜய் இயக்கத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘பொய் சொல்லப் போறோம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பியா பாஜ்பாய். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான ‘கோ’ படத்தின் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்பட்டார்.அந்த படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கிய கோவா படத்தில் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது. சமீபத்தில் வெளியான அபியும் அனுவும் படங்களிலும் நடித்தார்.

இப்படி ஒரு நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள தன் சகோதரருக்கு இன்று காலை முதலே டுவிட்டர் மூலம் உதவிகேட்டு வந்தார் பியா. “உத்தர பிரதேசத்தில் உள்ள பரூகாபாத் நகரில் தனது சகோதரர் இருப்பதாகவும், உடனடியாக படுக்கையும், வென்டிலேட்டர் வசதியும் அவருக்குத் தேவை, தயவு செய்து உதவுங்கள்” என பதிவிட்டிருந்தார்.ஆனால், நடிகை பியாவின் சகோதரருக்கு எதிர்பார்த்த உதவி கிடைக்கவில்லை போலிருக்கிறது. சிறிது நேரத்தில் “எனது சகோதரர் இறந்துவிட்டார்” என பதிவிட்டுள்ளார் பியா. 

-விளம்பரம்-
Advertisement