இந்திய திரைப்படங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா குமார். இவர் இந்தோ-அமெரிக்க நடிகை ஆவார். இவர் தமிழில் நடிப்பதற்கு முன்னாடி நிறைய ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். நடிகை பூஜா குமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்திய திரைப்படத்துறையில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் மிஸ் இந்தியா யுஎஸ்ஏ என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் முதன் முதலாக 2000 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் ரோஜாவே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.மேலும், இவர் கமலஹாசன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விஸ்வரூபம் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார். அதனைத் தொடர்ந்து இவர் விஸ்வரூபம்-2, உத்தமவில்லன் போன்ற படங்களில் கமலஹாசனுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கும் கமல்ஹாசனுக்கும் இடையே இருக்கும் உறவு குறித்து சோசியல் மீடியாவில் பல வதந்திகளும் சர்ச்சைகளும் எழுந்தன.
ஆனால், கமலுடன் உண்டான உறவு பற்றி பேசுகையில், கமல் சாரையும் அவரது குடும்பத்தினரையும் எனக்கு ரொம்ப நாளாகவே தெரியும். நான் அவரோட நடிக்கத் தொடங்கியதிலிருந்தே அவரது குடும்பத்திடம் எனக்கு நல்ல பழக்கம். தயாரிப்பாளராக இருக்கும் அவரது சகோதரர், அவரது மகள்கள், எல்லாரும் அப்படித்தான் என்னிடம் பழக்கமானாங்க.அதனால் நான் அவர்கள் குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன் என்று கூறி இருந்தார்.
மேலும் பூஜா குமாருக்கு ஜாய் என்கிற திருமண ஏற்பாடுகளை செய்யும் கார்ப்பரேட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் விஷால் ஜோஷி என்பவருக்கும் திருமணமான செய்தி ரகசியமாகவே காக்கப்பட்டு வந்தது. ஆனால், பூஜா குமார் சமூக வலைதளங்களில் இருந்தாலும் இது பற்றி அவர் பகிர்ந்ததில்லை. இப்படி ஒரு பூஜா குமாருக்கும் தனக்கும் குழந்தை பிறந்துள்ளதாக விஷால் ஜோஷி கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருந்தார்.
அதில், ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேர் தான் இருந்தோம். இப்போதும் மூன்று பேர். எங்கள் குட்டி மகள் நாவ்யா ஜோஷியை உங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் நானும் பூஜாவும் உற்சாகமடைகிறோம். எனக்கு மிகச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கு, குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு அழைத்து வந்ததற்கு நன்றி பூஜா. எனது இந்த பிறந்தநாளை என் வாழ்நாளின் மிகச் சிறந்த பிறந்தநாளாக மாற்றிவிட்டாய்.
உங்கள் இருவரையும் அவ்வளவு நேசிக்கிறேன் என்று பதிவிட்டு தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில் தனது மூன்று வயது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படத்தை பூஜா குமார் தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பூஜா குமாருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.