ஹாயாக ஆண் நண்பருடன் BMW காரில் ஊர் சுற்றிய சர்ச்சை நடிகை. ஆப்பு வைத்த போலீசார்.

0
611
Poonampandey
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களுக்கு மேலாக உலகையே உலுக்கி கொண்டு இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை இன்னும் சில நாட்களுக்கு நீட்டித்து உள்ளார்கள்.

-விளம்பரம்-

மேலும், பொது மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியில் நடமாட கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை மதிக்காமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு காவல் துறை கடுமையான தண்டனைகளை வழங்கி வருகிறது. ஆனால், விதி மீறல்களை சில பிரபலங்களும் செய்து தான் வருகின்றனர். அந்த வகையில் பிரபல சர்ச்சை நடிகையான பூனம் பாண்டே விதி மீறலை செய்துள்ளார்.

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ்.இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் ஊராட்ங்கை மீறி தனது நண்பருடன் சொகுசு காரில் சுற்றியதால் இவர் மீது வழக்கு பதிவப்பட்டுள்ளது. இது குறித்து வெளியான செய்தியில், பூனம் பாண்டே மற்றும் அவரது நண்பர் சரியான காரணமின்றி வெளியே அலைந்து கொண்டிருந்தனர். போலீசாரிடம் சிக்கிய அவர்களது பதில்களை போலீசார் ஏற்றுக்கொள்ளாததால் , ஐபிசி பிரிவு 188, 269 மற்றும் 51 (பி) ஆகியவற்றின் கீழ் மரைன் டிரைவ் காவல் நிலையத்தில் பூனம் பாண்டே மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், அவர்கள் வந்த BMW காரையும் போலீசார் சீஸ் செய்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement