டிவி நிகழ்ச்சி ஒன்றில் தன் மீது கைவைத்து பேசிய போட்டியாளரை திட்டி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கும் பூர்ணாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை.
தோலில் கைவைத்த போட்டியாளர் :
இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் தெலுங்கில் ஒளிபரப்பாகி வரும் ஸ்ரீதேவி டிராமா கம்பெனி என்ற ரியாலிட்டி தொடரில் நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஒன்றில் பூர்ணா பேசிக்கொண்டு இருக்கும் போது போட்டியாளராக பங்கேற்ற இம்மானுவேல் என்பவர் பூர்ணா தோலில் கைவைத்து பேசினார்.
கோபப்பட்டு கத்திய பூர்ணா :
இதை சற்றும் எதிர்பாராதா பூர்ணா, தன் மீது கை வைத்தவுடன் உதறிவிட்டு ‘என்ன இதெல்லாம், என்ன செய்கிறாய், எப்படி நீ என்னை தொடலாம்’ என்று கோபமாக பேசிவிட்டு மேடையை விட்டு கோபமாக சென்றுவிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏற்கனவே நடிகை பூர்ணா தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.
ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய பூர்ணா :
இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளம் நபருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பூர்ணா. அப்போது அவரது கண்ணத்தை கடித்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ‘ஒரு நடுவர் செய்யும் வேலையா இது’ விமர்சனங்கள் எழுந்தது. இதுகுறித்து விளக்கமளித்த பூர்ணா ‘ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு வகையான குணங்கள் உள்ளன. எனக்குப் பிடித்தவர்களின் கன்னங்களைக் கடிப்பதும் ஒரு குணம். நான் அடிக்கடி அம்மாவின் கன்னத்தையும் என் குடும்பத்தின் குழந்தைகளின் கன்னங்களையும் கடிப்பேன்.
கன்னத்தை கடிப்பதற்கு கொடுத்த விளக்கம் :
அது தவிர, எனக்கு பிடித்த குழந்தைகள் மற்றும் என் சகோதரி மற்றும் சகோதரன் வயதில் இருக்கும் குழந்தைகளின் கன்னங்களை கடிப்பேன். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் குழந்தைகளை இந்த வழியில் ஊக்குவிப்பேன். நிகழ்ச்சியில் நான் முத்தமிட்ட பையனை என் குழந்தையாகவே பார்க்கிறேன்.நான் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறேன். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு நான் முத்தமிடுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.