டான்ஸ் ஷோவில் போட்டியாளரின் கன்னத்தை கடித்து முத்தம் கொடுத்த குட்டி அசின் பூர்ணா – வீடியோ இதோ.

0
8255
poorna
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக ஜொலிக்காமல் போயிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை பூர்ணாவும் ஒருவர் இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். முதன் முதலாக 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். மேலும்,இந்த படத்தில் பரத், வடிவேலு மற்றும் பொன்வண்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.இவர் சசிகுமார் நடித்த கொடிவீரன் படத்தில் வில்லனுக்கு மனைவியாக மொட்டை அடித்துக் கொண்டு நடித்து இருந்தார். மேலும்,நடிகைகள் யாரும் எப்படி செய்ய முடியாத அளவிற்கு விஷயத்தையும் செய்தார்.

- Advertisement -

ஆனால், எல்லாமே வீணாகப் போய் விட்டது. அதோடு அந்த படமும் தோல்வியில் தான் போய் முடிந்தது. இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளம் நபருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பூர்ணா. அப்போது அவரது கண்ணத்தை கடித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவ ஒரு நடுவர் செய்யும் வேலையா இது என்று பலர் கூறி வருகின்றனர். இறுதியாக இவர் ஏ எல் விஜய் இயக்கத்தில் கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியான ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான ‘தலைவி’ படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-
Advertisement