போட்டியாளரின் கன்னத்தை கடித்தது ஏன் ? வைரல் வீடியோ குறித்து விளக்கமளித்த குட்டி அசின் பூர்ணா.

0
12497
poorna
- Advertisement -
தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகைகள் அழகும் திறமையும் இருந்தும் முன்னணி நடிகையாக ஜொலிக்காமல் போயிருக்கின்றனர். அந்த வகையில் நடிகை பூர்ணாவும் ஒருவர் இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். முதன் முதலாக 2008ல் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்தப் படத்தைத் தொடர்ந்து தமிழில் பல படங்களில் நடித்தார்.

அதுமட்டும் இல்லாமல் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார். அந்த வகையில் தெலுங்கு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தீ ஜோடி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

- Advertisement -
-விளம்பரம்-

இந்த நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில் நன்றாக நடனமாடிய ஒரு இளம் நபருக்கு முத்தம் கொடுத்துள்ளார் பூர்ணா. அப்போது அவரது கண்ணத்தை கடித்து உள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ ‘ஒரு நடுவர் செய்யும் வேலையா இது’ விமர்சனங்கள் எழுந்தது. இப்படி ஒரு நிலையில் இது குறித்து முதன் முறையாக மனம் திறந்துள்ளார் நடிகை பூர்ணா. இதுகுறித்து பேசியுள்ள அவர் ‘ ஒவ்வொரு தனிநபருக்கும் வெவ்வேறு வகையான குணங்கள் உள்ளன. எனக்குப் பிடித்தவர்களின் கன்னங்களைக் கடிப்பதும் ஒரு குணம்.

நான் அடிக்கடி அம்மாவின் கன்னத்தையும் என் குடும்பத்தின் குழந்தைகளின் கன்னங்களையும் கடிப்பேன். அது தவிர, எனக்கு பிடித்த குழந்தைகள் மற்றும் என் சகோதரி மற்றும் சகோதரன் வயதில் இருக்கும் குழந்தைகளின் கன்னங்களை கடிப்பேன். இது சரியா தவறா என்று எனக்குத் தெரியாது ஆனால் நான் குழந்தைகளை இந்த வழியில் ஊக்குவிப்பேன். நிகழ்ச்சியில் நான் முத்தமிட்ட பையனை என் குழந்தையாகவே பார்க்கிறேன்.

அவருடைய நடன திறமை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் என் குழந்தையை ஒரு நடனக் கலைஞராக வளர்க்கும் விதத்தில் வளர்க்க விரும்புகிறேன் என்று நானே சொன்னேன். நான் கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நடன நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று வருகிறேன். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு நான் முத்தமிடுவது ஒன்றும் புதிதல்ல என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement