தன்னுடைய டீப் ஃபேக் வீடியோ குறித்து நடிகை பிரக்யா போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகமாகி கொண்டிருக்கின்றது. எந்த அளவிற்கு தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் நன்மை இருக்கிறதோ அதே அளவிற்கு தீமையும் இருக்கிறது. AI என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். இதன் மூலம் எளிதாக போலிகளை உருவாக்கி விட முடியும்.

ஆரம்பத்தில் இதை வைத்து சினிமா பாடல்களை மோடியின் குரலில் வைரல் ஆக்கியிருந்தார்கள். பின் வயதான நடிகர்களை இளமையான தோற்றத்தில் காட்டி இருந்தார்கள். பின் லால் சலாம் படத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளிவந்த திமிறி எழுடா பாடலில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் ஷாகுல் ஹமீத் ஆகியோருடைய குரல் AI உதவியுடன் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
AI தொழிநுட்பம்:
அதேபோல் மலையாள நடிகர் மம்மூட்டியை 30 வயது வாலிபன் தோற்றத்தில் ஒரு படத்தில் AI மூலம் காட்டி இருக்கிறார்கள். இப்படி சினிமாவில் சில நன்மைக்கு ஏற்ப ஏ ஐ டெக்னாலஜிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இன்னொரு பக்கம் ஏஐ பயன்படுத்தி டீப் பேக் வீடியோக்களை உருவாக்கி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைஃப், ஆலியா பட் போன்ற பாலிவுட் நடிகைகளின் டீப் ஃபேக் வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருந்தது.
பிரக்யா நாக்ரா டீப் ஃபேக் வீடியோ:
இப்படி இருக்கும் நிலையில் நடிகை பிரக்யா நாக்ராவும் இந்த பிரச்சினையில் சிக்கிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜீவா நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியாகியிருந்த வரலாறு முக்கியம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி இருந்தவர் பிரக்யா நாகரா. இந்த படத்தை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
https://www.youtube.com/watch?v=CQA7j2qG0Ik
பிரக்யா நாக்ரா பதிவு:
இந்த நிலையில் நடிகை பிரக்யா நாக்ராவினுடைய டீப் ஃபேக் வீடியோ ஒன்று சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்து நிறைய சர்ச்சைகளும் கமெண்டுகளும் வந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து நடிகை பிரக்யா நாக்ரா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், எனக்கு இன்னும் ஏதோ ஒரு கெட்ட கனவில் இருப்பது போல தான் இருக்கிறது. டெக்னாலஜி நம்முடைய வாழ்க்கையை மேம்படுத்த கண்டுபிடிக்கப்பட்டது. நம்முடைய வாழ்க்கையை நாசமாக்க இல்லை.
Still in denial, and still hoping that it’s just a bad dream that I will wake up from. Technology was meant to help us and not make our lives miserable.
— Pragya Nagra (@PragyaNagra) December 7, 2024
Can just pity the evil minds who misuse it to create such AI content and the people who help spread it!
Trying to stay strong…
பிரக்யா கோரிக்கை:
AI மூலம் இந்த மாதிரியான செயல்களை செய்பவர்களை பார்த்து பரிதாபமாக தான் இருக்கிறது. இந்த மாதிரியான நேரத்தில் நான் மன உறுதியுடன் இருக்க முயற்சிக்கிறேன். எனக்கு ஆதரவு தெரிவித்து என் பக்கம் நின்றவர்களுக்கு ரொம்ப நன்றி. எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன். இதுபோன்ற AI எடிட்டிங் ஆபாச வீடியோக்களால் பெண்கள் பாதிக்கப்படாத அளவுக்கு சைபர் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.






