தினமும் ஒரு லட்சம் பேருக்கு உணவு. அரசு பள்ளி குழந்தைகளுக்கு ஆங்கில ஆசிரியை – சத்தமில்லாமல் செய்து வரும் நடிகை.

0
1328
1
- Advertisement -

கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக இந்த கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவை எதிர்த்து போலீசார், மருத்துவர்கள், தூய்மை பணியாளர்கள் என அனைவரும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து இரவு, பகல் என்று பாராமல் மக்கள் உயிரை காப்பாற்ற போராடி வருகிறார்கள். கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி , நான்காம் கட்ட ஊரடங்கை பிறப்பித்துள்ளார்.

-விளம்பரம்-
பிரணிதா

இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,25,000தை நெருங்கியது மற்றும் 3720 பேர் பலியாகியும் உள்ளனர். அதே போல் தமிழ்நாட்டில் தற்போது கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 ஆக உயர்ந்து உள்ளது. ஊரடங்கு உத்தரவினால் போக்குவரத்து, கடைகள், மக்களின் பொழுதுபோக்கு இடங்கள், மது கடைகள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

- Advertisement -

இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் உணவு தட்டுப்பாடு சூழல் ஏற்பட்டு உள்ளது. கொரோனவினால் ஏழை மக்கள், ஆதரவற்றோர், கூலி வேலை செய்பவர்கள் என பலர் உதவி செய்து வரும் நிலையில் கார்த்தி நடித்த சகுனி பட நாயகி பிரணிதா ஒரு நாளைக்கு 1 லட்சத்திற்கும் அதிகமானோர்களுக்கு உணவு பொருட்களை வழங்கி வருகிறார்.

பிரணிதா

இவர், பிரணிதா ஃபவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை கடந்த ஓராண்டிற்கு மேலாக நடத்தி வருகிறார்., அதன் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார். அவ்வளவு ஏன், டந்த வருஷம் கேரளாவுல வெள்ளம் வந்தப்போ கூட இந்த ஃபவுண்டேஷன் மூலமா மீட்புக்குழுவை அனுப்பிவைத்து உதவி செய்துள்ளார். அதுபோக அரசு பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக்கொடுத்து வருகிறார் பிரணிதா.

-விளம்பரம்-
Advertisement