மீண்டும் வானத்தை போல சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க?

0
1771
vanathai
- Advertisement -

மீண்டும் வானத்தைப்போல சீரியலில் இருந்து விலகிய நடிகை குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் ஒளிபரப்பாகும் வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், டிஆர்பி ரேட்டிங்கை பொறுத்தவரையில் எப்போதும் சன் டிவி சீரியல்கள் தான் அதிகம் ஆதிக்கம் செலுத்துகின்றது.

-விளம்பரம்-

அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட தொடர் வானத்தைப்போல. அண்ணன்– தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை. இந்த தொடரில் கதாநாயகியாக துளசி கதாபாத்திரத்தில் ஸ்வேதா நடித்து இருந்தார். சின்ராசு கதாபாத்திரத்தில் தமன் நடித்து இருந்தார். அண்ணன் சின்ராசு மீது பாசத்தைப் பொழியும் தங்கையாக துளசி நடித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

சீரியலில் விலகிய நடிகர்கள்:

மேலும், துளசி கதாபாத்திரத்தில் நடிகை மன்யா ஆனந்த் நடித்து வருகிறார். பின் சீரியலில் இருந்து ஸ்வேதாவை தொடர்ந்து சின்ராசுவாக நடித்து வந்த தமனும் விலகி விட்டார். தமன் சினிமாவில் அறிமுகமாகிட்டுத் தான் சீரியல் பக்கமே வந்தார். அதனால் மறுபடியும் சினிமா வாய்ப்பு வந்ததால் சீரியலில் விலகியதாக கூறி இருந்தார். அவருக்கு பதிலாக சீரியலில் நடிகர் ஸ்ரீகுமார் நடிக்கிறார். சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகர் ஸ்ரீகுமார்.

வானத்தைப் போல மன்யா

சீரியல் குறித்த தகவல்:

இவரும் பல வருடமாக சீரியலில் நடித்து வருகிறார். இவர்களை தொடர்ந்து சமீபத்தில் சீரியலில் இருந்து சரவணன் கதாபாத்திரத்தில் நடித்த சங்கரேஸ் விலகி இருந்தார். இதை இவரே சங்கரேஸ் மீடியாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இவருக்கு பதிலாக சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் சந்தோஷ் நடிக்கிறார். இப்படி தொடர்ந்து வானத்தைப்போல சீரியலில் இருந்து பல நடிகர்கள் விலகிக் கொண்டு இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is bri.jpg

மீண்டும் சீரியலில் விலகிய நடிகை:

இருந்தாலும் சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில் தற்போது சீரியலில் இருந்து பொண்ணி விலகி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் பொன்னி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ப்ரீத்தி. இவர் தொகுப்பாளினியாக தான் சின்னத்திரையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். தற்போது இவர் திடீரென வானத்தை போல சீரியல் இருந்து விலகி இருக்கிறார்.

ப்ரீத்தி பதிவிட்ட பதிவு:

இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இது குறித்து ப்ரீத்தி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கூறி இருப்பது, எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக கனத்த மனதுடன் வானத்தைப்போல தொடரில் இருந்து விலகுகிறேன். கண்ணியமான மௌனம் காக்க முடிவு செய்துள்ளேன் என்று பதிவிட்டிருக்கிறார். பொன்னி கதாபாத்திரத்தில் இனி ப்ரீத்திக்கு பதிலாக ஈரமான ரோஜாவே சீசன் 2வில் நடித்துக்கொண்டிருக்கும் சாந்தினி பிரகாஷ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement