பீஸ்ட்ல அப்படி பண்ணி இருப்பது கண்டனத்திற்குரியது – பிரேமலதா எச்சரிக்கை (ஆனா, படம் இன்னும் பாக்கலயாம்)

0
493
Premalatha
- Advertisement -

பீஸ்ட் திரைப்படம் குறித்து கேப்டனின் மனைவியும், தே மு தி க கட்சியின் பொருளாளருமான பிரேமலதா பேசி இருக்கிறார். மாஸ்டர் படத்தை தொடர்ந்து. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ்,யோகி பாபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-
Beast

இது நெல்சன் திலீப் குமாரின் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். கோகோ, டாக்டர் உள்ளிட்ட படங்களைத் இயக்கிய நெல்சன் பீஸ்ட் படத்தில் புது மாற்றத்தை காண்பிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான். இதுவரை வெளிவந்த விஜய் படங்களில் பீஸ்ட் படம் வித்தியாசமாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் கைக்கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

- Advertisement -

முஸ்லீம் லீக் எதிர்ப்பு :

இந்த படம் வெளியாவதற்கு முன்பே பல சர்ச்சைகளை குவித்தது. அதிலும் குறிப்பாக இந்த படத்தில் பயங்கரவாதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் விதமான காட்சிகள் கொண்ட படங்களுக்கு எதிராக அரபு நாடுகள் கடுமை காட்டி வருவதால் கத்தார் மற்றும் குவைத் நாடுகளில் பீஸ்ட் படத்துக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போல இப்படத்தை தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் அறிக்கை ஒன்று வெளியானது.

பீஸ்ட் சர்ச்சை :

தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் தமிழக உள்துறை செயலாளர் எஸ் கே பிரபாகரனுக்கு கடிதம் எழுதப்பட்டது என்பது குறிப்பிடதக்கது. இப்படி ஒரு நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

-விளம்பரம்-

பிரேமலதா கண்டனம் :

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், தான் இன்னும் பீஸ்ட் படத்தை பார்க்கவில்லை என்றும், அந்தப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகள்போல் சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது என்றும் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், இனிவரும் காலங்களில் மக்கள் பிரச்சினை எதுவாக இருந்தாலும் தேமுதிக முதல் ஆளாக களத்தில் நிற்கும் என்றார்.

விஜய் – விஜயகாந்த் உறவு :

நடிகர் விஜய் குடும்பத்திற்கும், நடிகர் விஜயகாந்த் குடும்பத்திற்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. நடிகர் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் , நடிகர் விஜயகாந்தை சட்டம் ஒரு இருட்டறை ‘ என்ற படத்தில் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் தொடர்ந்து விஜயகாந்தை வைத்து பல்வேறு படங்களை இயக்கினார் எஸ் ஏ சந்திரசேகர்.அதே போல நடிகர் விஜய் ‘நாளைய தீர்ப்பு ‘ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானாலும், விஜய்க்கு திரைத்துறைக்கு ஒரு சிறந்த எண்ட்ரியாக அமைந்தது.

சம்பளம் கேட்காத கேப்டன் :

விஜய்காந்த் நடித்த செந்தூர பாண்டி ‘ என்ற படம் தான். அந்த நன்றியை மனதில் இன்று வரை வைத்துள்ளார் நடிகர் விஜய். மேலும், எஸ்.யே. சி 1993 ஆம் ஆண்டு செந்தூர பாண்டி என்ற படத்தை எடுக்கும் போது விஜயகாந்த் ஒரு மிகப்பெரிய ஸ்டாரக இருந்தார் அப்போது அந்த படத்தில் நடிப்பதற்கு விஜய்காந்திடம் எஸ்.யே. சி சம்பளம் பேசிய போது நடிகர் விஜயகாந்த் சம்பளத்தை பற்றி எல்லாம் பிறகு பேசிக்கொள்வோம் முதலில் படப்பிடிப்பை தொடங்குங்கள் சார் என்று சொன்னாராம் கேப்டன்.

Advertisement