என்னுடைய முதல் காதல் இவர் மீது தான்..!ஆனால், அதுவும் தோல்வி..!பிரியா பவானி ஷங்கர்..!

0
457
Priyabhavani-shankar

புதிய தலைமுறை தொலைகாட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிகையாக இருந்து வந்தவர் ப்ரியா பவனி ஷங்கர் . பின்னர் “மேயாதமான்” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கடைசியாக கார்த்திக் நடித்த “கடைக்குட்டி” சிங்கம் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Priya

கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகளில் கமிட் ஆகிவரும் நடிகை பிரியா பவானி ஷங்கர் தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து வரும் நடிகை ப்ரியா பவானி ஷங்கருக்கு பள்ளி பருவத்திலேயே காதல் மலர்ந்து விட்டதாம். அதிலும் அவரை விட மூத்த வயதுள்ள ஒரு நபரிடம். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் முதல் காதல் குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருவரிடம் காதல் வந்தது.அவர் என்னை விட பெரியவர் அது காதல் என்று சொல்ல முடியாது நான் அவரை சைட் அடிப்பேன். ஆனால், அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் அக்கா ஒருவரை காதலித்தார். அதற்கு நான் தான் உதவி செய்தேன். அப்போது எனக்கு மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால், கொஞ்ச நாளிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் அப்போது தான் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது என்று நகைப்புடன் கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.