சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகள் பலரும் திருமணம் முடிந்தாலே உடல் அமைப்பை பெரிதாக கண்டுகொள்வது இல்லை. திருமணத்திற்கு முன் படு ஸ்லிம்மாக இருக்கும் பல நடிகைகள் திருமணம் முடிந்த பின்னர் படு பருமனாக மாறிவிடுகின்றனர். அந்த வகையில் பிரியா மணியும் ஒருவர். திரையுலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர் பிரியாமணி. தெலுங்கு திரையுலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘எவரே அதகாடு’. இந்த படத்தினை இயக்குநர் பி. பானு ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக வல்லபா நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ப்ரியாமணி நடித்திருந்தார். இது தான் நடிகை ப்ரியாமணி ஹீரோயினாக அறிமுகமான முதல் தெலுங்கு திரைப்படமாம்.
இதனைத் தொடர்ந்து ப்ரித்விராஜின் ‘சத்யம்’ என்ற மலையாள படத்தில் நடித்தார் ப்ரியாமணி. அதன் பிறகு தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகுடன் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை ப்ரியாமணி, அடுத்ததாக தமிழ் திரையுலகிலும் நுழையலாம் என முடிவெடுத்தார். 2004-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘கண்களால் கைது செய்’.
இதையும் பாருங்க : நான் தான் அந்த ஷோபி, எல்லாரும் என்ன மன்னிச்சிடுங்க – ட்ரோல் தாங்காமல் வீடியோ வெளியிட்ட 2k மருமகள்.
இது தான் நடிகை ப்ரியாமணி தமிழ் சினிமாவில் என்ட்ரியான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர்பாரதிராஜா இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக வசீகரன் என்பவர் நடித்திருந்தார். ‘கண்களால் கைது செய்’ படத்துக்கு பிறகு ‘அது ஒரு கனாக்காலம், மது, பருத்தி வீரன், மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும், ராவணன், சாருலதா’ என அடுத்தடுத்து பல தமிழ் படங்களில் நடித்தார் ப்ரியாமணி.
தெலுங்கு, மலையாளம், தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் ப்ரியாமணி. ஹிந்தி திரையுலகில் 2013-ஆம் ஆண்டு வெளி வந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திலும் நடித்து இருந்தார். திருமணத்திற்கு பின்னர் பிரியா மணி கொஞ்சம் உடல் எடை கூடி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தனது உடல் எடையை குறைத்து படு ஸ்லிம்மாக மாறியுள்ளார்.