தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பெரும்பாலான ஹீரோக்கள் படங்களில் நண்பனாகவும், வில்லனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் ரஞ்சித். குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்த ரஞ்சித், பல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மலையாளம் என்று பல மொழிகளில் நடித்து வந்த ரஞ்சித் 90ஸ் காலகட்டத்தில் இவரை போலவே மிகவும் பிரபலமாக திகழ்ந்து வந்த நடிகை பிரியா ராமனை 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். நேசம் புதிது படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த போது காதல் ஏற்பட அது திருமணத்தில் முடிந்தது.
திருமணத்திற்கு இவர்களுக்கு ஆதித்யா (வயது 14), ஆகாஷ் (10) என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். நன்றாக சென்று கொண்ட இருந்த இவர்கள் வாழ்வில் கருத்து வேறுபாடு ஏற்பட இவர்கள் இருவரும் கடந்த 2014 ஆண்டு ஜூன் 6 ஆம் தேதி இருவரும் சட்ட ரீதியாக விவகாரத்துப்பெற்று பிரிந்துவிட்டனர். பிரியா ராமனை பிரிந்த அதே ஆண்டே நடிகர் ரஞ்சித், நடிகை ராகசுதாவை திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணமான ஒரே ஆண்டிலேயே இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டனர்.
இதையும் பாருங்க : என் மகன் பெருசா வளந்துட்டான், அவன சமாளிக்கவே என் சக்தி போயிடுது – மகனுடன் அஞ்சனா பதிவிட்ட புகைப்படம்.
இரண்டு முறை விவாகரத்து பெற்ற ரஞ்சித், இரண்டாம் திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிப்பதையும் நிறுத்திவிட்டார். இறுதியாக இருவர் கடந்த 2015 ஆம் ஆண்டு நடிகர் ஜீவன், நடித்த அதிபர் என்ற படத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இப்படி ஓர் நிலையில் இவர், விஜய் தொலைக்காட்சியில் கடந்த ஆண்டு துவங்கிய ‘செந்தூரப்பூவே’ தொடர் மூலம் மீண்டும் நடிக்கத் துவங்கினார்.
பல ஆண்டுகள் கழித்து சீரியல் மூலம் ரீ என்ட்ரி கொடுத்ததற்கான காரணம் குறித்து பேசிய நடிகர் ரஞ்சித். என்னுடைய தாய் ஆறு மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். அவர் தான் என்னை டிவி தொடரில் நடிக்க வேண்டும் என்றும், தினமும் உன்னை நான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். ஆனால், நான் போம்மா அதெல்லாம் நமக்கு செட்டாகாது என்று சொல்லி விட்டேன் என்று கூறி இருந்தார்.