பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கும் தன் கணவர் நடிகர் ரஞ்சித் குறித்து நடிகை பிரியா ராமன் சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார். விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்து தற்போது மூன்றாம் வாரம் சென்று கொண்டிருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்குகிறார். இந்த சீசனில் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், சாச்சனா நமிதாஸ், தர்ஷா குப்தா, சத்யா, தீபக், சுனிதா, கானா ஜெஃப்ரி, ஆர்ஜே ஆனந்தி, நடிகர் ரஞ்சித், பவித்ரா, தர்ஷிகா, அர்னவ், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அருண் பிரசாத் ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று உள்ளனர்.
இந்த முறை ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்பதால் பல்வேறு ட்விஸ்ட்களுடன் நிகழ்ச்சி ஆரம்பமாகியுள்ளது. நிகழ்ச்சி ஆரம்பித்து இரண்டு வாரங்கள் முடிந்த நிலையில், ரவீந்திரன் மற்றும் அர்னவ் போட்டியிலிருந்து வெளியேறி உள்ளார்கள். மேலும், இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நபர்களில் ரஞ்சித்தும் ஒருவர். இவர் முதல் வாரத்தில் அமைதியாக சத்தமில்லாமல் விளையாடினாலும், இரண்டாவது வாரத்தில் தன்னுடைய விளையாட்டை தொடங்கி விட்டார். இந்நிலையில் நடிகர் ரஞ்சித் குறித்து அவரின் மனைவி ப்ரியா ராமன் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
ப்ரியா ராமன் பேட்டி:
அதில் ப்ரியா ராமன், பிக் பாஸ் டாஸ்க் விளையாடும் போது ரஞ்சித் கொஞ்சம் அமைதியாக தான் இருப்பாரு. சில சமயங்களில் அவர் பாடவும் செய்வாரு. அவர் நல்லாவே பாடுவார். அவர் பாடியதை நாங்க ரெகார்ட் செய்தெல்லாம் வைத்திருக்கிறோம். பிக் பாஸ் வீட்டில் இப்ப யார் தந்திரமாக விளையாடுறாங்கன்னு கேட்டா, எனக்கு தெரிஞ்சு எல்லாரும் என்ன பால் வரும்னு தெரியாம தான் பேட்டிங் பண்றாங்க. சில நேரங்களில் அந்தப் பந்து ஹெலிகாப்டர் ஷாட் ஆகவும் மாறிடும், டக் அவுட் ஆகவும் மாறிடும். எல்லாருமே அவங்க திறமையை வெளிக்காட்டுவதற்கு ஒரு நேரம் வேணும்.
ரஞ்சித் மற்றும் விஜே விஷால்:
அதேபோல், பிக் பாஸ் வீட்டில் இருக்கிற விஷாலுக்கும் ரஞ்சித்துக்கும் ஒரு நல்ல பந்தம் இருக்கிறது. அவங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் நடிச்சதால், அவர்கள் இருவருக்கும் ஒரு புரிதல் இருக்கிறது. அதேபோல் அருணும் நல்ல விளையாடிட்டு இருக்காரு. நாளடைவில் தன்னை தக்க வைக்கிறதுக்காக மற்ற போட்டியாளர்கள் எப்படி இருப்பாங்கன்னு தெரியாது. அதை நாம் விமர்சிக்கவும் கூடாது. அவையெல்லாம் சூழலுக்கு ஏற்றவாற மாறும். இப்போ ரஞ்சித் ஒரு நேர்மையான மனிதன் என்று எல்லாரும் புரிஞ்சிகிட்டாங்க.
தாய்ப் பாசம் குறித்து:
மேலும், ரஞ்சித் ஒரு அம்மா பைத்தியம். அவருக்கும் அவருடைய அம்மாவுக்கும் இடையே அப்படி ஒரு பந்தம் இருக்கிறது. அவங்க ரெண்டு பேரும் நல்லா சண்டை போடுவாங்க. சண்டைக்குப் பிறகு ரஞ்சித்தோட அம்மா சாப்பிடவில்லை என்றால் ரஞ்சித்தும் சாப்பிட மாட்டார். இப்போ அவர் அவரின் அம்மா இழப்பிலிருந்து இன்னும் மீண்டு வரவில்லை. அதேபோல், எல்லாரும் சொல்ற மாதிரி ரஞ்சித் ஆர்வக்கோளாறு கிடையாது. எந்த நேரத்தில் எப்படி விளையாடனும் என்று அவருக்குத் தெரியும். அந்த சமயத்தில் அவர் ஜொலிப்பாரு என்று கூறியுள்ளார்.
செம்பருத்தி சீரியல்:
அதைத்தொடர்ந்து ப ரியா ராமன், ‘செம்பருத்தி’ சீரியலில் நான் 5 வருஷம் நடித்தேன். அந்த சீரியல் இவ்வளவு பெரிய ஹிட் ஆகும் என்று நான் நினைக்கவே இல்லை. என் குழந்தைகள் சிறுவர்களாக இருந்தபோது இந்த சீரியல் தொடங்கியது, அந்தத் தொடர் முடியும் போது என் குழந்தைகள் நல்லா வளந்துட்டாங்க. குழந்தைகளோட இருக்கலாம் என்றுதான் நான் ஒரு வருடம் பிரேக் எடுத்துக்கிட்டேன். ரஞ்சித்தும் பட வேலைகளில் பிஸியாக இருந்ததால், நான் குழந்தைகளை பார்த்துக் கொண்டேன். தற்போது மீண்டும் நடிப்பதற்கு கதைகளை கேட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் என்று ப்ரியா ராமன் கூறியுள்ளார்