இயக்குனர்களுடன் நடந்த கெட்ட அனுபவம், முதல் ஹீரோ விஜய் பற்றி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பிரியங்கா சோப்ரா.

0
6540
priyanka

தமிழ் சினிமாவில் எத்தனையோபிரபலங்கள் மற்றும் முக்கிய சாதனையளர்கள் படங்கள் வாழ்கை வைரலாக எடுக்கப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலோனோர் வாழ்கை வரலாறு புத்தகத்தின் அடிப்படையில் தான் எடுக்கப்படும். அதனால் தான் என்னவோ பல்வேறு நடிகை நடிகைகள் கூட தங்களது வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதி வருகின்றனர். சமீபத்தில் கூட நடிகை ஆண்ட்ரியா தனது வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டார். அதிலும் தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த ஒரு அரசியல் பிரபலம் பற்றி அதில் எழுதி இருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் தமிழில் விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது ஹாலிவுட் வரை கலக்கி கொண்டு வரும் நடிகை பிரியங்கா சோப்ராவும் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புத்தகத்தில் சினிமாவில் தான் முதன் முறையாக அறிமுகமான விஜய் படம் குறித்தும் விஜய் குறித்தும் எழுதி இருக்கிறார். நடிகை பிரியங்கா சோப்ரா 2000-ஆம் ஆண்டில் உலக அழகி பட்டத்தை வென்றதன் பின்னர் விஜய்யின் தமிழன் படத்தில் நடித்து இருந்தார்.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் இவர் தமிழில் வேறு எந்த படமும் நடிக்கவில்லை, அப்படியே பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கே சூப்பர் ஸ்டார் நடிகர்களான சல்மான் கான் ஷாருக்கான் துவங்கி பல முன்னணி நடிகர்களுடன் நடித்தார். இவர் தன்னை விட வயதில் குறைவான நபரை காதலித்து திருமணம்செய்துகொண்டார்.அமெரிக்க நடிகர் மற்றும் பாப் பாடகர் நிக் ஜோனஸை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களுடைய திருமணம் ஜோத்பூரில் கோலாகலமாக நடைபெற்றது.

தற்போது இவர் தனது கணவருடன் வெளிநாட்டில் தான் வசித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை  ’அன்ஃபினிஷ்டு’  என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். . ஒரு சில இயக்குநர்களிடமிருந்து தனக்கு நடந்த கெட்ட அனுபவங்களை அவர் பேசியிருந்தாலும், அவரது முதல் ஹீரோ தளபதி விஜய்யைப் பற்றி பாஸிட்டிவான வார்த்தைகளில் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் பணிவு மற்றும் ரசிகர்களுடனான அவரது தாராள மனப்பான்மை, அவர் மீது எனக்கு ஒரு நீடித்த தோற்றத்தை ஏற்படுத்தியது. ‘குவாண்டிகோ’ செட்டில்,” மதிய உணவு இடைவேளையில் நான் அவர்களுடன் நின்று படங்களை எடுத்தபோது, எனது முதல் சக நடிகரைப் பற்றியும் அவர் அமைத்த முன்மாதிரியைப் பற்றியும் நினைத்தேன்”  என்று குறிப்பிட்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

-விளம்பரம்-
Advertisement