அந்த நிகழ்ச்சிக்கு சித்து – ஸ்ரேயா தான் வரவேண்டும் – அடம் பிடிக்கும் ரசிகர்கள்

0
408
sidhu
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் சித்து-ஸ்ரேயா ஜோடி போட்டியாளராக கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வரும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனாலேயே விஜய் டிவியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை விட நிகழ்ச்சிகள் தான் ரசிகர்கள் மத்தியில் படு பேமஸ். இதனால் சில நிகழ்ச்சிகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து சீசன் 1, 2, 3 என தொடர்ந்து சென்று கொண்டிருக்கின்றது. அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்படும் நிகழ்ச்சி மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை நடிகர், நடிகைகள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வது.

- Advertisement -

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சி:

இந்த நிகழ்ச்சி முதல் இரண்டு சீசன்களுக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி இருந்தது. அந்த சீசனும் டிஆர்பி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நீயா நானா கோபிநாத் மற்றும் தேவதர்ஷினி தான் நிகழ்ச்சியின் நடுவர்களாக பங்கு பெற்று இருந்தார்கள். நடந்து முடிந்த மூன்றாவது சீஸனில் சரத்- கிருத்திகா டைட்டில் வின்னர் என்ற பட்டத்தை பெற்றிருந்தார்கள்.

மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சி:

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்திருந்த மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனுடைய சூட்டிங் சமீபத்தில் தான் தொடங்கி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த சீசனில் கலந்து கொள்ளப்போகும் போட்டியாளர்கள் யார்? என்ற பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து பலரும் கமெண்ட்ஸ்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சின்னத்திரை ரசிகர்கள் பலரும் சித்து- ஸ்ரேயா ஜோடி தான் இதில் கலந்து கொள்வார்கள்.

-விளம்பரம்-

சித்து- ஸ்ரேயா ஜோடி:

இன்னும் சில தீவிர ரசிகர்கள் அவர்கள் கண்டிப்பாக வரவேண்டும் அவர்கள் வந்தால் தான் இந்த நிகழ்ச்சியைப் பார்ப்போம் என்றெல்லாம் கமெண்ட்டுகளை குவித்து வருகிறார்கள். அந்த அளவிற்கு சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்து இருக்கிறார்கள் சிந்து- ஷ்ரேயா ஜோடி.இவர்களை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி புகழ் ஸ்ருத்திகா- அர்ஜுன், சமீபத்தில் திருமணமான அஜய் கிருஷ்ணா- ஜெஸ்ஸி என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.

நிகழ்ச்சி குறித்த தகவல்:

இதில் யாரெல்லாம் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள்? இவர்களைத் தவிர வேறு எந்த ஜோடிகள் இந்த நிகழ்ச்சியில் களம் இறங்கி இருக்கிறார்கள்? போன்ற தகவல்கள் எல்லாம் இன்னும் சில நாட்களில் அதிகாரபூர்வமாக வெளியாகி விடும். இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Advertisement