31 வது திருமண நாளை கொண்டாடி நடிகை ராதா பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி படங்களில் நடித்திருக்கிறார். இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடத்தி இருக்கிறார்.
மேலும், 80, 90 காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக ராதா திகழ்ந்தார். இவருடைய சகோதரி நடிகை அம்பிகாவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். அதோடு ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
ராதா குடும்பம்:
பின் சினிமா பட வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் ராதா சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே கடந்த 1996ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
ராதா மகள்கள்:
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. அதேபோல் ராதாவின் இளைய மகள் துளசியும் நடிகையாக இருக்கிறார். இப்படி இருவரும் தன் தாயை போல் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. இந்நிலையில் ராதா தன்னுடைய திருமண நாளை கொண்டாடி பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
ராதா திருமண நாள்:
பொதுவாகவே சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. அதற்கு விதிவிலக்காக சிலர் தான் இருப்பார்கள். அந்த வகையில் ராதாவும் ஒருவர். இவர் தன்னுடைய 31 வது திருமண நாளை தன்னுடைய கணவருடன் சேர்ந்து கொண்டாடி இருக்கிறார். அவருடைய கணவர் அளித்த அழகான கம்பலை அணிந்து ராதா தன்னுடைய திருமண நாளை மகிழ்ச்சியை கொண்டாடி இருக்கிறார். மேலும், திருமணம் நாள் குறித்து சோசியல் மீடியாவில் ராதா பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.
ராதா பதிவிட்ட பதிவு:
அதில் அவர், திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றது என்று சொல்வார்கள். உங்களுக்கு சரியான நபர் கிடைத்தால் நீங்கள் பூமியிலும் சொர்க்கத்தை அனுபவிக்க முடியும். எனது கணவரும் என் குழந்தைகளும் எனக்கு சொர்க்கத்தை முழுமையாக்குகிறார்கள் என்று பதிவிட்டிருக்கிறார். இப்படி ராதா பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ராதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.