சமீபத்தில் கலர்ஸ் ஹிந்தி தொலைக்காட்சியில் நேஹா துப்பியா நடத்தும் டாக் ஷோ ஒன்றில் பங்கேற்ற ராதிகா அப்டே, தான் நடித்த தமிழ் படத்தில் நடித்த நடிகர் ஒருவரை அறைந்துவிட்டதாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதுவரை கபாலி உட்பட 4 தமிழ் படங்களில் நடித்துள்ள ராதிகா அப்டே .ஒரு தமிழ் பட ஷூட்டிங்கின்போது தமிழ் நடிகர் ஒருவர் தனது அருகில் வந்து நின்றதாகவும் ,ஆனால் அதற்கு முன்னால் நான் அவரை பார்த்ததே இல்லை எனவும் பின்னர் அருகில் வந்து நின்ற அவர் தனது காலை சுரன்டியதால் அத்திரமடடைந்த ராதிகா அப்டே அவரை கன்னத்தில் பளார் என்று அறைந்ததாக ஒரு அதிர்ச்சியான சம்பவத்தை கூறியுள்ளார்.
ஆனால் அந்த நடிகர் யார் ,எந்த படத்தின் ஷூட்டிங்கின் போது இந்த சம்பவம் நடந்தது என்று அவர் கூறவில்லை. ஆனால் ராதிகா அப்டே அந்த சம்பவத்திற்கு முன்னாள் அவரை கண்டதே இல்லை என்று கூறியிருப்பதால் அவர் பிரபலமான நடிகராக இருக்க வாய்ப்பில்லை என்று எண்ணம் தோன்றுகிறது.




