எனக்கு மகனாக நடிக்க அவங்க பொருத்தமா இருபாங்களானு பாருங்க. ராதிகாவின் பதிலால் கடுப்பான அஜித் ரசிகர்கள்.

0
54979
ajith-radhika
- Advertisement -

தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் மற்றும் தல என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் அஜித் பொதுவாக சினிமா அவலங்கள் பேட்டியில் பங்கேற்றால் அஜித் பற்றிய கேள்விகள் இடம் பெறாமல் இருந்தது கிடையாது அதே போல பல்வேறு பிரபலங்களும் அஜித் குறித்து ஆஹா ஓஹோ என்று புகழ்ந்து தள்ளி தான் இதுவரை நாம் கேட்டு இருக்கிறோம் ஆனால் சமீபத்தில் ராதிகா சரத்குமார் அஜித் குறித்து கிண்டலாக பதில் அளித்தார் என்று ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது அது என்ன என்பதை இதில் பார்ப்போம்.

-விளம்பரம்-

வீடியோவில் 4:45 நிமிடத்தில் பார்க்கவும்

- Advertisement -

தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா சரத்குமார். தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் நடித்த ராதிகா தற்போது இருக்கும் முன்னணி நடிகர்களின் படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், இதுவரை சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுக்கு அம்மாவாக நடித்திருக்கிறார் நடிகை ராதிகா சரத்குமார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வரும் ராதிகா, தற்போது கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கோடிஸ்வரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இதையும் பாருங்க : பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா? அவரே சொன்ன தகவல்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ராதிகாவிடம் நீங்கள் அம்மாவாக நடிக்க விஜய் அஜித் சூர்யா விஜய் சேதுபதி என்று இதில் யாருக்கு பொருத்தமாக இருப்பீர்கள் என்று கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த ராதிகா நான் அனைவருக்கும் அம்மாவாக நடித்து இருக்கிறேன் சூர்யாவிற்கு விஜய்க்கு விஜய் சேதுபதிக்கு என்று அனைவருக்கும் அம்மாவாக நடித்து இருக்கிறேன் ஆனால் அஜித்துக்கு அம்மாவாக நடிக்க வில்லை என்று பதில் கூறினார். பின்னர் யாருக்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கேள்வி கேட்கப் பட்டதற்கு அவங்க எனக்கு பையனாக இருக்க வேண்டும் என்றால் முதலில் அவர்கள் பொருத்தமாக இருப்பார்களா என்பதை பாருங்கள் என்று கேள்விக்கு பதில் அளித்தார் ராதிகா.

-விளம்பரம்-

ராதிகாவின் இந்த பதிலைக் கேட்ட அஜித் ரசிகர்கள் கடும் கோபத்தில் இருந்து வருகிறார்கள் மேலும் இந்த வீடியோவிற்கு கீழே அஜித் ரசிகர்கள் சிலர் பவித்ரா படத்தில் அஜீத்துக்கு அம்மாவாக நடித்திருக்கும் அது மறந்து விட்டதா என்றெல்லாம் ராதிகாவை கேட்டு வருகிறார்கள் ஆனால் பவித்ரா படத்தில் நடிகை ராதிகா ஒரு செவிலியராக நடித்திருந்தார் மேலும் அந்த படத்தில் அஜித்தை அக்கறையாக பார்த்துக் கொள்ளும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்தார் என்றும் அந்த படத்தில் அஜித்தின் அம்மாவாக நடிக்கவில்லை ஒரு சிலர் கூறி வருகிறார்கள் ராதிகா அஜித்தை இப்படி மறைமுகமாக கிண்டல் அடித்தார் என்பது ரசிகர்களுக்கே வெளிச்சம்.

Advertisement