தனது குழந்தையுடன் நீச்சல் குளத்தில் ராதிகா – இது வரை யாரும் பார்த்திடாத புகைப்படம்.

0
4992
radhika
- Advertisement -

தமிழ் சினிமாவில் 80, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா. நடிகை ராதிகா அவர்களின் முதல் கணவர் பிரபல இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே ஆண்டில் இவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள்.அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ரேயான் என்ற மகளும் பிறந்தார். பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார்.

- Advertisement -

பிறகு தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கும் நடிகர் சரத்குமாரை கடந்த 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சரத்குமார்– ராதிகாவின் மகள் ரேயான்க்கும், கர்நாடகாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அபிமன்யுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது.

ரேயான் மற்றும் அபிமன்யு மிதுன் தம்பதியருக்கு ஏற்கனவே ஆண் குழந்தை இருந்த நிலையில் சமீபத்தில் தான் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்தது. ரெயின் அடிக்கடி ராதிகாவுடன் எடுத்துக்கொண்ட சில அறிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சிறுவயதில் தன்னுடன் ராதிகா நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement