கலாய்க்குறதுக்குனே இந்த போட்டோவ போடீங்களா – ரகுல் ப்ரீத்தின் லேட்டஸ்ட் லுக்கை வச்சி செய்யும் ரசிகர்கள்.

0
1178
rakul
- Advertisement -

தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரகுல் பிரித் சிங். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் பல படங்களில் நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல இந்தி மற்றும் கன்னட மொழி கூட திரைப் படங்களில் நடித்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் அவர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார்.

-விளம்பரம்-

முதலில் இவர் ரீமேக் படங்களில் தான் நடித்து வந்தார். அதற்கு பிறகு தான் முன்னணி நடிகர்கள் படத்தில் கதாநாயகியாக நடிக்க இவருக்கு பட வாய்ப்புகள் நிறைய வந்தது. இதனை தொடர்ந்து ரகுல் பிரித் சிங் ‘தடையறத் தாக்க’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர், தேவ், செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான என்.ஜி.கே போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

இதையும் பாருங்க : நீண்ட நேரம் இந்தியில் கேட்ட கேள்விக்கு ஒரே வார்த்தையில் பல்ப் கொடுத்த தனுஷ் – வைரலாகும் வீடியோ.

- Advertisement -

தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங் அந்தப் படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்து வரும் அவரது பதினான்காவது படத்தில் நடித்து வருகிறார். ஆனால், இந்த இரண்டு படங்களை தவிர அம்மணிக்கு வேறு பட வாய்ப்பு இல்லை.தமிழ் சினிமாவில் கவர்ச்சிக்கு பஞ்சம் காண்பித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெலுங்கு மற்றும் இந்தியில் கவர்ச்சிக்கு தடையின்றி நடித்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான தி தி பியார் தி என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பலரையும் திகைப்பில் ஆழ்த்தினார் ரகுல் பிரீத் சிங். அதே போல பாலிவுட் சென்றதும் உடல் எடையை குறைத்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவர் சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் ஏலியன், ஸ்கெலிடன் என்று கேலி செய்து வருகின்றனர். மேலும், ட்ரோல் செய்யவதற்கே இப்படி எல்லாம் போட்றீங்களா என்றும் கமன்ட் செய்து உள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement