கர்பமாக இருக்கும்போது இப்படி செய்யலாமா..? புகைப்படம் உள்ளே.!

0
1304
Rambaa

நடிகை ரம்பா, 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தமிழ் ,தெலுகு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வந்தவர். சமீபத்தில் மீண்டும் கற்பமாக இருக்கும் நேரத்தில் நடிகை ரம்பா செய்துள்ள காரியம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

- Advertisement -

1975 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் பிறந்த நடிகை ரம்பா, 1992 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘ஆ ஓக்கடி அடுக்கு’ எனும் படத்தின் மூலம் திரை துறைக்கு அறிமுகமானர். பின்னர் 1993 ஆம் தமிழில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர். இதுவரை ரஜினி, விஜய்,அஜித் என்று தமிழின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார் நடிகை ரம்பா. திருமணத்திற்கு பின்னர் 2011 ஆம் ஆண்டு லாண்யா என்ற மகளையும் 2015 ஆம் ஆண்டு ஷாஷா என்ற மற்றுமொரு மகளையும் ஈன்றுடுத்தார் நடிகை ரம்பா. திருமணமாகி இரண்டு குழந்தைகள் பெற்ற பின்னரும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்றார்.

-விளம்பரம்-

With Sonakshi ?

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

ஏற்கனவே இரண்டு மகளை பெற்றுள்ள நடிகை ரம்பா, மீண்டும் கர்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. சில நாட்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார் ரம்பா.இந்நிலையில் நடிகை ரம்பா சல்மான் மான் கானை பார்க்க நெடு தூரம் விமானத்தில் பயணம் செய்து அவரை சந்தித்துள்ளார்.

Judwaa 1 & 2 ?

A post shared by RambhaIndrakumar? (@rambhaindran_) on

சமீபத்தில் டோரண்டோ மாநிலத்தில் நடிகர் சல்மான் கான் ‘தபாங்’ என்ற நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். இதனை அறிந்த நடிகை ரம்பா அவரை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கர்ப்பமான நேரத்தில் சல்மான் கானை சந்திக்க இவ்வளவு தூரமா பயணம் செய்வது என்று இந்த புகைப்படத்தை பார்த்த இன்ஸ்டாகிராம் வாசிகள் கமண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement