பாலிவுட்டை போல தமிழ் சினிமாவிலும் சமீப காலமாக விவாகரத்து என்பது மிகவும் சாதாரண ஒரு விஷயம் ஆகிவிட்டது. அதிலும் குறிப்பாக மிகவும் பிரபலமான நடிகர் நடிகைகளின் விவகாரத்து பெரும் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது. சமீபத்தில் சமந்தா, தனுஷ், இமான் என்று பல பிரபலங்கள் தங்களின் விவகாரத்தை அறிவித்து இருந்தனர். இவர்களின் இந்த விவாகரத்து முடிவுகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தான் கொடுத்தது. ஆனால், விவாகரத்து வரை சென்று மீண்டும் கணவருடன் சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்து வரும் ரம்பாவின் கதை கொஞ்சம் ஆறுதல் அளிப்பதாகவே இருக்கிறது.
தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி ஸ்னேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல தொடை அழகி என்ற வித்யாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரம்பா. சிம்ரன், ரோஜா, மீனா போன்ற முன்னணி நடிகைகள் இருந்த காலத்தில், சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார் நடிகை ரம்பா. 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான உழவன் என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
12 ஆண்டு திருமண வாழ்க்கை :
அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களான விஜய் அஜித் போன்ற அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், தெலுகு, ஹிந்தி, மலாயாளம் என்று பல மொழி படங்களில் நடித்து காலாக்கி வந்த ரம்பா. தொடர்ந்து படங்களில் நடித்து ரம்பா பட வாய்ப்புகள் குறைந்ததால் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்திர குமார் பிரேமானந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு 3 குழந்தைகளுக்கு தாயான பின்னரும் சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என்று தனது கலை பயணத்தை தொடர்ந்து வந்தார். தற்போது சமதோஷமாக வாழ்ந்து வரும் ரம்பாவின் வாழ்விலும் விவகாரத்து பிரச்சனை எழுந்தது. நடிகை ரம்பா இரண்டு குழந்தையை பெற்ற பின் கடந்த 2016 ஆம் ஆண்டு கணவருடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தியாவிற்கு திரும்பி வந்தார். பின் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இவர்களின் வழக்கு நீதி மன்றத்தில் நடந்து கொண்டு இருந்தது.
மாதம் 2.5 லட்சம் கேட்ட ரம்பா :
அப்போது ரம்பா நீதிமன்றத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில் திருமணத்திற்கு முன், சினிமாவில் தொடர்ந்து நடித்து வந்தேன். பின், நடிப்பதை நிறுத்தி விட்டேன். எனக்கும், இரு குழந்தைகளை பராமரிக்கவும், போதிய வருமானம் இல்லை. என் மூத்த மகளின் பள்ளி படிப்புக்கு, ஆண்டுக்கு, 3.5 லட்சம் ரூபாய் செலவாகிறது. இளைய மகளுக்கு, மருத்துவ சிகிச்சை பெற வேண்டியதுள்ளது. எனக்கும், குழந்தைகளின் பராமரிப்புக்கும், மாதம், 2.5 லட்சம் ரூபாய் தேவை.என் கணவருக்கு, தொழிற்சாலை உள்ளது; மாதம், 25 லட்சம் ரூபாய் வருமானம் வருகிறது. என்னையும், குழந்தைகளையும் பராமரிக்க வேண்டிய கடமை, அவருக்கு உள்ளது.
கணவர் – மனைவி சமரசம் :
எனக்கு, 1.5 லட்சம் ரூபாய்; குழந்தைகளுக்கு, தலா, 50 ஆயிரம் ரூபாய் என, 2.5 லட்சம் ரூபாய் வழங்கும்படி, கணவருக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார் ரம்பா. கடந்த மார்ச் 20 ஆம் தேதி 2017 ஆம் ஆண்டு இந்த மனு விசாரணைக்கு வந்த போது ரம்பா மற்றும் அவருடைய கணவர் இந்திரன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். இந்த வழக்கு குறித்து கருத்து கூறிய நீதிபதி, ‘கணவன்-மனைவி இருவருக்கும் இடையே உள்ள பிரச்னையை சமரச மையத்தில் பேசித் தீர்த்து கொள்ளுமாறு ரம்பாவுக்கும், அவரது கணவருக்கும் அறிவுரை கூறினார்.
ரம்பாவின் வாழ்கை ஒரு உதாரணம் :
இதை தொடர்ந்து ரம்பாவும் அவரது கணவரும் சேர்ந்து வாழ முடிவெடுத்தனர். கணவருடன் மீண்டும் சேர்ந்து வாழ துவங்கிய அடுத்த ஆண்டே மூன்றாம் குழந்தையையை பெற்று எடுத்தார் ரம்பா. தற்போது மூன்று குழந்தைகளுடன் தன் கணவருடன் மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் ரம்பா. தற்போதைய சூழ்நிலையில் பிரபலங்கள் பலரும் மிகவும் சுலபமாக விவகாரத்தை அறிவித்து பின் கணவருடன் மீண்டும் குழந்தை பெற்று சந்தோசமாக வாழ்ந்து வரும் ரம்பா பல நட்சத்திர நடிகைகளுக்கு ஒரு நல்ல உதாரணம் தான்.