சின்னத்திரையில் மீண்டும் நடிகை ரம்பா என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்குடன் ஹீரோயின் ஆக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து இவர் பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருந்தார்.
இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ரம்பா திருமணம்:
அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய குடும்பம், குழந்தைகள், கணவர் பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார்கள். மேலும், இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் குழந்தைகள் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.
சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்து வைத்தார்கள். இதை அடுத்து 30-க்கும் அதிகமான கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக பேட்டியில் ரம்பா கூறி இருந்தார்.
ரம்பா குறித்த தகவல்:
அதோடு இதற்கிடையில் இவர் சில நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். அதற்கு பின் இவர் எந்த நிகழ்ச்சி, சினிமாவிலுமே தலைகாட்டாமல் தான் இருந்தார். இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு நடிகை ரம்பா என்ட்ரி கொடுக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இதனால் புதுப்புது வித்தியாசமான கான்செப்டில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகிறார்கள்.
ஜோடி ஆர் யூ ரெடி:
அந்த வகையில் கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் ஜோடி ஆர் யூ ரெடி. இது ஜோடி நம்பர் 1ன் 11வது பகுதி என்று கூறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை ரியோ ராஜ் மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்கி இருந்தார்கள். மேலும், இந்த நிகழ்ச்சிக்கு நடுவர்களாக நடிகை மீனா, ஸ்ரீதேவி விஜயகுமார், நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்று இருந்தார்கள். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தான் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி இருந்தது.
சின்னத்திரையில் ரம்பா என்ட்ரி:
தற்போது இந்த நிகழ்ச்சியினுடைய இரண்டாவது சீசன் கூடிய விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த இரண்டாவது சீசனில் சாண்டி, ஸ்ரீ தேவி உடன் நடுவராக ரம்பா களமிறங்கி இருக்கிறார். இது தொடர்பாக அறிவிப்புமே வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் ரம்பாவுக்கு வாழ்த்து வருகிறார்கள்.
Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.