தன் கணவரை இன்ஸ்டாகிராமில் கூட நடிகை ரம்பா பாலோ செய்யாதிருக்க காரணம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்குடன் ஹீரோயின் ஆக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து இவர் ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், பூமகள் ஊர்வலம், ஆனந்தம் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என்று பல மொழி படங்களில் நடித்திருந்தார்.
ரம்பா திருமணம்:
இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 இந்திரகுமார் பிரேமாநந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் நடிகை ரம்பா முழுவதுமாகவே சினிமாவில் இருந்து விலகி விட்டார். இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் ஹோம் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்து இருந்தார்கள்.

ரம்பா குறித்த தகவல்:
இந்த புதிய கிளையை நடிகர் ரம்பா மற்றும் அவரது கணவர் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தார்கள். மேலும், கடை திறப்பு விழாவிற்கு பின் நடிகை ரம்பா செய்தியாளர்களை சந்தித்து, ஏற்கனவே மேஜிக் ஹோம் நிறுவனத்தின் முதல் கிளை சென்னையில் செயல்பட்டு வருகிறது. தற்போது இதன் இரண்டாவது கிளையை திறந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. 30-க்கும் மேற்பட்ட கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டுள்ளோம். நான் எனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கவில்லை.

சினிமா குறித்து சொன்னது:
தமிழ் சினிமாவில் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு படமும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பெண்களுக்கான நல்ல கதைகள் தமிழ் சினிமாவில் அமைவதும் இல்லை. வருங்காலத்தில் நல்ல கதைகள் அமைந்தால் கண்டிப்பாக சினிமாவில் நடிப்பேன் என கூறி இருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்பா, நான் என்னுடைய கணவரை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்வதே கிடையாது. காரணம், தமன்னா தான்.
View this post on Instagram
ரம்பா அளித்த பேட்டி:
என்னுடைய கணவர் என்னை தான் முதன்முதலாக ஃபாலோ செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், அவர் இன்ஸ்டாவில் தமன்னாவை ஃபாலோ செய்கிறார். அதனால் நான் அவரை ஃபாலோ செய்யவில்லை. ஆனால், அவர் என்னுடைய அக்கவுண்ட்டை ஃபாலோ செய்கிறார். மற்றவர்களை நாம் ஃபாலோ செய் என்று சொல்ல முடியாது. என்னுடைய கணவர் என்பதால் அவரை கேட்கலாம் இல்லையா? என்று ஜாலியாக பேசியிருந்தார்.






