15 ஆண்டுகளுக்கு பின்னர் தனது கணவருடன் இணைந்த ரம்யா கிருஷ்ணன்..

0
41516
Ramya-Krishnan

ராஜமவுலி இயக்கத்தில் திரையரங்கை அதிர வைத்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்,” இதுவே என் கட்டளை, என் கட்டளையே என் சாசனம்” என்ற பாகுபலி படத்தின் டயலாக் மூலம் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணா.அதோடு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘படையப்பா’ படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் தான் இவருடைய சினிமா திரை பயணத்தையே மாற்றியது என்று கூட சொல்லலாம். இன்னும் நீலாம்பரி கதாபாத்திரம் நின்று பேசுகிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தெரிக்கவிட்டாரு. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும்,ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய 15 வயதிலேயே சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவர் ‘வெள்ளை மனசு’ எனும் படத்தின் மூலம்தான் முதன்முதலாக சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.

Image result for ramya krishnan marriage photo

அது மட்டும் இல்லைங்க நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்தவர் என்று பார்த்தால் நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தாங்க. மேலும் இவரை அப்பவே லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் பட்டையை கிளப்புவார் என்று கூட சொல்லலாம். தற்போது வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.நடிகர்கள் ஒரு சில பேர் சின்னத்திரைக்கு வந்துவிட்டால் வெள்ளி திரையில் மவுசு குறைந்து விடும். ஆனால், நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

சமீபத்தில் வந்த பாகுபலி, தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பிறகு ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தற்போது ஒரு புது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் ரம்யா கிருஷ்ணன் கணவர் இயக்குனர் கிருஷ்ணா வம்சி அவர்கள் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தெலுங்கு இயக்குனர் கிருஷ்ணா வம்சி 2003ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ரம்யா கிருஷ்ணன் நடிக்கப் போகிறார் என்று தெரிந்தவுடன் நெட்டிசன்கள் பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Image result for ramya krishnan husband

அது மட்டும் இல்லைங்க ரம்யா கிருஷ்ணன் அவர்கள் ஏற்கனவே கிருஷ்ணா வம்சி இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு சந்திரலேகா என்ற படத்த்திலும் , 2004 ஆம் ஆண்டு ஸ்ரீ ஆஞ்சநேயர் என்ற படத்திலும் நடித்திருந்தார். தற்போது அதற்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து “வந்தே மாதரம்” என்ற படத்தின் மூலம் இருவரும் இணைய உள்ளார் என்ற தகவல் வெளியானது. அது மட்டும் இல்லைங்க இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் அவர்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,இந்த படத்தில் அவிகா கோர் மற்றும் பல நடிகர்கள் நடிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்கள்.

-விளம்பரம்-
Advertisement