தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் முதன் முதலில் ‘டம்மி டப்பாசு’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். அதன் பின் இவர் ‘ஜோக்கர்’ படத்தின் மூலம் பிரபலம் ஆனார். அதற்குப் பின்னர் தான் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக ‘ஆண் தேவதை’ என்ற படத்தில் நடித்தார். ஆனால், அந்தப் படம் பெரிய அளவில் வெற்றி தரவில்லை. அதற்குப் பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. பின் இவர் நடத்திய போட்டோ சூட் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலம் ஆனார்.

அதன்பின் தான் இவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார். பின் இவர் ‘பிக் பாஸ் சீசன் 4’ நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். தற்போது இவர் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதற்கிடையில் ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் யோகா பயிற்சி பெற்றார். அப்போது அங்கு பயிற்சியாளராக பணியாற்றி வரும் லோவல் தவானுக்கும் ரம்யா பாண்டியனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
ரம்யா பாண்டியன் திருமணம்:
இதை சமீபத்தில் ரம்யா பாண்டியன் உறுதி செய்து இருந்தார். பின் இவர்களுக்கு ரிஷிகேஷ் கங்கை நதிக்கரை ஓரத்தில் உள்ள கோயிலில் தான் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டிருந்தார்கள். பின் திருமண வரவேற்பு நவம்பர் 15 ஆம் தேதி சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இந்த நிலையில் ரம்யா பாண்டியனின் திருமணம் குறித்து அவருடைய அம்மா சாந்தி துரை பாண்டியன் அளித்த பேட்டியில், எங்களுடைய சொந்த ஊர் திருநெல்வேலி. எனக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள். இரண்டாவது பெண் தான் ரம்யா பாண்டியன். அவர் ரொம்பவே கெட்டிக்காரி, திறமையானவள். என்னுடைய கணவர் இயக்குனராக சில படம் எடுத்தார். ஆனால், அது தோல்வியடைந்ததால் நாங்கள் திருநெல்வேலிக்கே வந்து பிசினஸ் செய்தோம்.

ரம்யா பாண்டியன் அம்மா பேட்டி:
ஒரு விஷப் பூச்சி கடித்து என்னுடைய கணவர் இறந்துவிட்டார். என்னுடைய கணவர் இறப்புக்கு பிறகு ரொம்ப பொறுப்பானவளாக ரம்யா பாண்டியன் மாறினார். அவள் எடுக்கும் முடிவு எல்லாமே சரியாக இருக்கும் என்பதால் அவர் ஒருவரை காதலிக்கிறேன் என்று சொன்னதுமே நாங்கள் சரி என்று ஒத்துக் கொண்டோம்.
அவளுக்கு யோகாவில் ரொம்ப ஆர்வம். அதனால் தான் அவர் பெங்களூரில் யோகா கோர்ஸ் பண்ண போயிருந்தார். அப்போதுதான் லோவல் தவான் உடன் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டு காதலிக்க தொடங்கினார். அவரும் ரொம்ப தங்கமான மனிதர். ரம்யா தான் முதலில் காதலை சொல்லியிருக்கிறார்.

திருமணம் பற்றி சொன்னது:
ரிஷிகேஷில் இருவருமே சந்தித்துக் கொண்டதால் அங்கே தான் திருமணம் நடக்க வேண்டும் என்று ரம்யா நினைத்தார். அதுமட்டுமில்லாமல் திருமண தாலி எங்களுடைய முறைப்படி கட்டணம் என்று சொன்னதால் மாப்பிள்ளையும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், சங்கீத், ஹல்தி பங்க்ஷன் எல்லாமே அவர்களுடைய முறைப்படி தான் நடந்தது. மாப்பிள்ளை ரொம்ப ரொம்ப நல்லவர். திருமணத்துக்காக எந்த செலவுமே பண்ண கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால், ரம்யா தான் ரிசப்ஷன் செலவை ஏற்றுக் கொண்டார். மாப்பிள்ளை குடும்பம் பஞ்சாப் மாநிலம். அவருடைய அம்மா, அப்பா எல்லாருமே ரொம்ப நல்ல டைப். மாப்பிள்ளை ஓட குடும்பத்துக்கு பஞ்சாபில் எட்டு மெடிக்கல் லேப் இருக்கிறது. 65 பேருக்கு மேல் அவர்களிடம் வேலை செய்கிறார்கள். எங்களிடமிருந்து ஒரு ரூபாய் கூட அவர்கள் வரதட்சணை கேட்கவே இல்லை.

வரதட்சணை பற்றி சொன்னது:
பஞ்சாப் முறைப்படி பொண்ணு வீட்டில் வரதட்சனை கேட்க கூடாதாம். மாப்பிளை தான் வரதட்சனை கொடுத்து திருமணம் பண்ணிக்கணும். அதனால் திருமணத்திற்கு முன்பே மாப்பிள்ளை யோட அப்பா, லட்சத்துல ஒரு பெரிய தொகையை கொடுத்து நகை வாங்கிக்க சொன்னார். திருமணம் முடிந்து ரம்யா பாண்டியன் செய்து தந்த கேசரியை சாப்பிட்டு அவருடைய அம்மா ஒரு பாக்ஸில் லட்ச ரூபாயை போட்டுக் கொடுத்தார். இப்படி அவர்கள் பணம் மட்டுமில்ல குணத்திலும் ரொம்ப நல்லவர்கள். மாப்பிளை ரம்யாவை ரொம்ப அன்போடு பார்த்துக் கொள்கிறார். எங்கள் மீதும் ரொம்ப மரியாதையோடும், அக்கறையோடும் நடந்து கொள்கிறார். இப்படிப்பட்ட மாப்பிளை கிடைத்ததற்கு ரம்யா மட்டும் இல்லை நாங்களும் தான் ரொம்ப கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்று நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.






