மகனின் 16வது பிறந்தநாளை கொண்டாடும் ரம்யா கிருஷ்ணன் – இவருக்கு இவ்வளவு பெரிய மகனா.

0
1353
Ramyakrishnan
- Advertisement -

ராஜமவுலி இயக்கத்தில் திரையரங்கை அதிர வைத்த பாகுபலி படத்தில் ராஜமாதா சிவகாமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும்,” இதுவே என் கட்டளை, என் கட்டளையே என் சாசனம்” என்ற பாகுபலி படத்தின் டயலாக் மூலம் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணா.அதோடு கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘படையப்பா’ படத்தின் நீலாம்பரி கதாபாத்திரம் தான் இவருடைய சினிமா திரை பயணத்தையே மாற்றியது என்று கூட சொல்லலாம். இன்னும் நீலாம்பரி கதாபாத்திரம் நின்று பேசுகிறது என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தெரிக்கவிட்டாரு.

-விளம்பரம்-

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும்,ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய 15 வயதிலேயே சினிமா பயணத்தை ஆரம்பித்தார். இவர் ‘வெள்ளை மனசு’ எனும் படத்தின் மூலம்தான் முதன்முதலாக சினிமா துறைக்கு என்ட்ரி கொடுத்தார்.அது மட்டும் இல்லைங்க நடிகை ஸ்ரீதேவிக்கு பிறகு பல மொழிகளில் வெற்றி படங்களை கொடுத்தவர் என்று பார்த்தால் நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தாங்க. மேலும் இவரை அப்பவே லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் பட்டையை கிளப்புவார் என்று கூட சொல்லலாம்.

- Advertisement -

தற்போது வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.நடிகர்கள் ஒரு சில பேர் சின்னத்திரைக்கு வந்துவிட்டால் வெள்ளி திரையில் மவுசு குறைந்து விடும். ஆனால், நம்ம ரம்யா கிருஷ்ணன் மட்டும் தான் சின்னத்திரை, வெள்ளித்திரை என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்.இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது.

அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.2003 ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு, ரித்விக் என்ற மகனும் பிறந்தார். இப்படி ஒரு நிலையில் மகனின் 16 வது பிறந்தநாளை கொண்டாடியுள்ள புகைப்படத்தை ரம்யா கிருஷ்ணன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement