சிம்புவுக்கு தங்கையாக நடித்த ரங்கம்மா பேத்தி யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
1821
actress rangamma

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பல படங்களில் காமெடி ரோலில் நடித்த ரங்கம்மாள் பாட்டி சென்னை மெரினா பீச்சில் பிச்சை எடுக்கிறார் என தகவல் வந்தது. ஆனால், ரங்கம்மாள் பாட்டியை அணுகி விசாரித்த போது, தான் பிச்சை எடுக்கவில்லை எனவும், சூட்டிங்கை தாண்டி சின்ன சின்ன பொருட்களை விற்று சம்பாரித்து வருவதாகவும் கூறினார்.

actress-rangamma-paati

இந்த ரங்கம்மாள் பாட்டிக்கு மொத்தம் 12 குழந்தைகள். 12 பேருக்குமே திருமணம் ஆகிவிட்டது. மேலும், 15க்கும் மேற்ப்பட்ட பேரன் பேத்திகள் உள்ளனர். ஆனால் இவ்வளவு பேர் இருந்தும் பாட்டியை பார்த்துக்கொள்ள ஒருவர் கூட முன்வரவில்லை என சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறினார் ரங்கம்மா.

மேலும், நான் யாரையும் நம்பி இல்லை. என் உடல் நன்றாக உள்ளது, அதனால் உழைத்து சாப்பிடுகிறேன். எனவும் கூறினார். இதில் ஒரு சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால்

vactress alentina

ரங்கம்மாள் பாட்டியின், ஒரு மகளின் மகள் (பேத்தி) விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடித்துள்ளார். அவரது பெயர் த்ரிஷா அலெக்ஸ். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவின் தங்கையாக நடித்துள்ளார் ரங்கம்மாள் பாட்டியின் பேத்தி த்ரிஷா அலெக்ஸ். இந்த விஷயத்தை ரங்கம்மாள் பாட்டி தானாகவே ஒரு பேட்டியில் கூறினார்.