இவ்ளோ நடந்தும் என் கணவர் எப்படி என் கூட இருப்பார் – நித்யானந்தா விஷயம் குறித்து மனம் திறந்த ரஞ்சிதா

0
286
- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கிய நாயகியாக வலம் வந்தவர் ரஞ்சிதா. இவர் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடித்து இருந்தார். மேலும், ரஞ்சிதா ஆரம்ப காலத்தில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் பிற்காலத்தில் கவர்ச்சி கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி இருந்தார். இப்படி சினிமாவில் கொடிகட்டி பறந்து கொண்டிருந்த ரஞ்சிதா திடீரென்று நடிப்பை நிறுத்திவிட்டு நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சேர்ந்தார்.

-விளம்பரம்-

அங்கு நித்யானந்தாவை தனது குருவாக எண்ணி பூஜித்தார். சாமியார் நித்தியானந்தா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு சினிமா பிரபலங்களை விட சோசியல் மீடியாவில் சர்ச்சைகளில் சிக்கிய நாயகன். இவருக்கு இந்திய நாட்டில் மட்டும் இல்லாமல் உலகில் பல நாடுகளில் ஆசிரமங்கள் இருக்கின்றது. உலக அளவில் இவருக்கு பக்தர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும் நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் பல புகார்கள் எழுந்து இருக்கின்றது.

- Advertisement -

நித்தியானந்தா மீது வழக்கு:

அதிலும், குழந்தைகள் கடத்தல், பாலியல் துஸ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய வந்த குழந்தைகளை பாலியல் கொடுமைப் படுத்துதல் போன்ற பல குற்றச்சாட்டுகள் அவர் மீது எழுந்து இருக்கிறது. அதோடு மத்திய அரசு நித்யானந்தாவை தீவிரமாக தேடியும் வருகிறது. இப்படி ஒரு சூழ்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் போலி சாமியார் நித்தியானந்தா உடன் ரஞ்சிதா இருந்த படுக்கை அறைக் காட்சிகள் வெளியாகி மிகவும் மோசமாக விமர்சிக்கப்பட்டு இருந்தது. இது அனைவருக்கும் தெரிந்ததே.

ரஞ்சிதா குறித்த சர்ச்சை:

இதன் மூலம் இவர் சினிமாவில் வாங்கி வைத்த மொத்த பெயர், புகழ் எல்லாமே டேமேஜ் ஆகி இருந்தது என்றே சொல்லலாம். அதன் பின்னர் இவர் வேறு வழியின்றி அந்த ஆசிரமர்த்திலேயே செட்டில் ஆகி விட்டார். இந்த சம்பவத்துக்கு பின் இன்றுவரை நித்தியானந்த கூடவே நிழலாக இருக்கிறார் ரஞ்சிதா. நித்தியானந்தா சொல்லும் கைலாசத்தில் ரஞ்சிதாவும் உடனிருந்து கவனித்துக் கொள்கிறார். இந்த நிலையில் நடிகை ரஞ்சிதா அளித்த பழைய பேட்டி குறித்த தகவலை தான் இங்கு பார்க்க போகிறோம். ரஞ்சிதா- நித்தியானந்தா சர்ச்சைக்கு பிறகு சில மாதங்கள் அவர் என்ன ஆனார்? என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

ரஞ்சிதா பேட்டி:

அதற்குப்பின் பேட்டியளித்த ரஞ்சிதா, என்னை ஏன் இப்படி செய்தீர்கள்? அந்த வீடியோவில் இருந்தது நான் இல்லை. என் மரியாதையை பொதுவெளியில் கெடுத்து விட்டீர்கள். என் அப்பா பெரிய பிசினஸ் மேன் எல்லாம் கிடையாது. அவருக்கு எந்த பவருமே இல்லை. நாங்கள் சாதாரண மிடில் கிளாஸ் ஃபேமிலி தான். எங்க அப்பாவால் என்னை காப்பாத்த முடியவில்லை. அந்த சமயத்துக்கு அப்புறம் நான் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட யோசித்தேன்.

கணவர் குறித்து சொன்னது:

அப்படி செய்து கொண்டால் என் குடும்பத்தை யார் பார்த்து கொள்வார்கள் என்று தான் நான் அந்த முடிவை கைவிட்டேன். நான் புத்தகம் படித்தால் மறந்துவிடுவேன். அப்படிதான் என் வாழ்க்கையின் கசப்பான பல விஷயங்களை மறந்தேன். இவ்வளவு என்னை பொதுவெளியில் அசிங்கப்படுத்திய பிறகு என்னுடைய கணவர் எப்படி எடுத்து கொள்வார். நானும் என் கணவரும் பிரிந்து விட்டோம். எனக்கு நடந்ததை எல்லாம் அவர் எப்படி தாங்குவார்? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு இல்லையா? என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். தற்போது இவர் நித்தியானந்தா உருவாக்கி இருக்கும் கைலாசத்தில் பிரதமராக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement