கத்தி முனையில் தமிழ் துணை நடிகை பாலியல் வன்கொடுமை – இரவில் நேர்ந்த கொடுமை.

0
464
- Advertisement -

வளசரவாக்கத்தில் கத்தி முனையில் துணை நடிகையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த மர்ம நபர் இருவர் கைதான சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமாவில் நடிக்கும் நடிகைகளுக்கு மீடு பிரச்சினை இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதை பலர் வெளிப்படையாக சொன்னாலும், சிலர் வெளியில் சொன்னால் அவமானம் என்று கருதி தெரிவிக்காமல் இருக்கிறார்கள். இது சினிமாவில் மட்டும் இல்லாமல் சாதாரண பெண்களுக்கும் இந்த கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

அந்த வகையில் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமையை போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் மட்டும் இல்லாமல் சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னையில் வளசரவாக்கம் பகுதியில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். அவர் படங்களில் அவர் துணை நடிகை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.

- Advertisement -

மர்மநபரால் பாதிக்கப்பட்ட பெண்:

மேலும், கடந்த மார்ச் 8 ஆம் தேதி அன்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தன்னுடைய வீட்டில் அவர் தனியாக இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டின் கதவை திறந்து நடிகையை கத்திமுனையில் மிரட்டி அறைக்குள் அழைத்துச் சென்று கதவை அடைந்துள்ளார். இதை தொடர்ந்து அந்த நபர் நடிகையை சத்தமிட கூடாது என்று கத்தியை காட்டி மிரட்டி இருக்கிறார். பின் அந்த கொடூரன் பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். எவ்வளவோ முயற்சித்தும் நடிகையால் அந்த மர்ம நபரிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை.

போலீசில் புகார் அளித்த துணை நடிகை:

சிறிது நேரத்தில் அங்கு வேறு ஒரு நபரும் வந்துள்ளார். இருவரும் கூட்டாளிகள் என்பது தெரிய வந்தது. இந்த இரண்டு நபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை மிரட்டி ஒன்றரை சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பி உள்ளனர். பிறகு பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவம் குறித்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார் கொடுத்துள்ளார். அந்த துணை நடிகை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணையில் சிக்கிய மர்ம நபர்:

பின் இன்ஸ்பெக்டர் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிரமாக விசாரணை செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் அருகில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர்கள் 2 பேரின் அடையாளங்களை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஒருவர் மதுரவாயில் கந்தசாமி நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவரும் மற்றொருவர் ராமபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவரும் தெரியவந்தது.

போலீஸ் கைது செய்யப்பட்ட நபர்கள்:

இருவரையும் வன்கொடுமை, கொள்ளை உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகையிடம் இருந்து பறிக்கப்பட்ட ஒன்றரை சவரன் தங்க நகைகள் மற்றும் 3 செல்போன்கள், இரண்டு சக்கர வாகனங்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால், அவர் எந்த நடிகை என்ற தகவல் மட்டும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement