தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடக்கும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி இருந்தது.
ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:
உலக அளவில் இப்படம் தற்போது வரை ரூபாய் 1600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இதை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா, சல்மான்கானுடன் சிக்கந்தர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் சாவா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
சாவா படம்:
இந்த படத்தில் விக்கி கவுசல் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். லக்ஷ்மன் உடேகர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார். மேலும், காதலர் தினத்தை முன்னிட்டு வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் போது நடிகை ராஷ்மிகா பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
ராஷ்மிகா சொன்னது:
சமீபத்தில் நடந்த சாகா படத்தின் ப்ரோமோஷனின்போது ராஷ்மிகா, நான் ஹைதராபாத் சேர்ந்தவள். ஆனால், நான் தனியாகத்தான் இங்கு வந்தேன். இப்போது நானும் உங்கள் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் என்று நினைக்கிறேன். நன்றி என்றெல்லாம் பேசி இருந்தார். இதைப் பார்த்து தான் கன்னடர்கள் சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்து வருகிறார்கள். காரணம், ராஷ்மிகா கர்நாடகாவில் குடகு மாவட்டம் விராஜ் பேட்டையில் தான் பிறந்தார். இதற்கு நெட்டிசன், குடகு மாவட்டம் விராஜ் பேட்டை ஹைதராபாத்தில் இருக்கிறது என்று எனக்கு தெரியாது. அது கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன் என்றார்.
நெட்டிசன்கள் ட்ரோல்:
இன்னொருவர், இத்தனை ஆண்டுகளாக உங்களை ட்ரோல் செய்து வரும் அனைவரையும் நான் குற்றம் சாட்டினேன். ஆனால், இப்போது நீங்கள் பேசியதை பார்க்கும்போது அவர்கள் சொல்வது சரியாகத்தான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். இப்படி ஒரு தரப்பினர் ராஷ்மிகாவை கிண்டல் செய்தாலுமே இன்னொரு தரப்பினர் ராஷ்மிகாவுக்கு ஆதரவாக கூறினார்கள். அதோடு ராஷ்மிகா, எப்போதுமே தன்னுடைய சொந்த ஊர் கூர்க் என்று தான் கூறியிருக்கிறார். அது தொடர்பான வீடியோவையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து ட்ரோல் செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்கள்.