ராஷ்மிகா மந்தனாவின் படத்திற்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் ‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரே பாடல் மூலம் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர். அதை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என்று பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் ராஷ்மிகா மந்தனா அவர்கள் தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த புஷ்பா 2 என்ற படத்தில் நடித்திருந்தார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் வெளியாகி இருந்தது.
ராஷ்மிகா மந்தனா திரைப்பயணம்:
உலக அளவில் இப்படம் தற்போது வரை ரூபாய் 1600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது.
இதை தொடர்ந்து ராஷ்மிகா அவர்கள் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா, சல்மான்கானுடன் சிக்கந்தர் போன்ற படங்களில் நடித்து வருகிறார். பின் தமிழில் ரெயின்போ, மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அங்கத வகையில் தற்போது இவர் ஜாவா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இது மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஜாவா படம்:
இந்த படத்தில் விக்கி கவுசல் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, நாயகி. அக்ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். லக்ஷ்மன் உடேகர் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருக்கிறார். வருகிற பிப்ரவரி 14-ஆம் தேதி தான் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகியிருந்தது. அதில் மகாராஷ்டிராவின் பாரம்பரிய நாட்டுப்புற நடனம் லெஜிம்.
படத்தின் பாடல்:
இதற்கு இசைக்கருவியை வாசித்தபடி விக்கி கவுசல், ராஷ்மிகா மந்தனும் நடனமாடிருக்கிறார்கள். தற்போது இந்த காட்சிக்கு தான் பலருமே எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். மேலும், சத்ரபதி சிவாஜியின் பரம்பரையை சேர்ந்த சம்பாஜி ராஜேவும் இந்த காட்சிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். காரணம், லெஜிம் நடனம் வாசிப்பதை படத்தில் காட்டுவது சரி. ஆனால், சத்ரபதி சம்பாஜி மகாராஜ் நடனம் ஆடுவது போல படத்தில் காட்டி இருப்பது தவறு.
இயக்குனர் முடிவு:
சுதந்திரமாக படத்தை எடுக்கிறோம் என்ற பெயரில் வரம்புகள் மீறி காட்சிகள் எடுக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டி இருக்கிறார்கள். இது தொடர்பாக மகாராஷ்டிரா அமைச்சர், இந்த படத்தை முதலில் வரலாற்று ஆய்வாளர்களுக்கு காட்டாமல் வெளியிடக் கூடாது. மகாராஜின் கௌரவத்துக்கு தீங்கு விளைக்கும் எதையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து படத்தின் இயக்குனர் லக்ஷ்மன் உடேகர், லெஜிம் நடனம் சத்ரபதி சம்பாஜி மகாராஜாவை விட பெரிது கிடையாது. அதனால அந்த காட்சியை படத்திலிருந்து நீக்குகிறோம் என்று கூறியிருக்கிறார்.