வெட்கம், மானம் இல்லையா? விக்கி, நயன் திருமண ஆவணப்படத்தில் தனுஷ் குறித்த சர்ச்சை- உண்மை இதுதான்

0
260
- Advertisement -

நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஆவணப்படத்தில் தனுஷ் குறித்த காட்சி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் தனுஷ்- நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிசியாக படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை netflix நிறுவனம் பெற்றிருந்தது. இதனால் இது தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை.

- Advertisement -

விக்கி -நயன் திருமணம்:

மேலும், விக்கி -நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். இந்த திருமண நிகழ்வு வீடியோ நவம்பர் 18ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் நிறுவனமே கிருஷ்ணன் இயக்கி இருக்கிறார். இதில் நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல்கள், காட்சிகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக நானும் ரவுடி தான் படத்தினுடைய தயாரிப்பாளர் தனுஷ் இடம் அனுமதி கேட்டு 2 வருடங்களாக காத்து இருந்தார்கள். ஆனால், தனுஷ் அனுமதி தரவில்லை.

தனுஷ் குறித்த சர்ச்சை:

இதை அடுத்து சமீபத்தில் இந்த ‘Beyond the Fairy Tale’ படத்தினுடைய ட்ரைலர் வெளியாகியிருந்தது. அதில் மூன்று வினாடி நானும் ரவுடிதான் படத்தினுடைய பாடல் மற்றும் ஒரு காட்சி வந்திருக்கிறது. இதனால் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவிற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் தான் காட்டுத்தீயாய் சோசியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கின்றது. பின் இது தொடர்பாக நடிகை நயன்தாரா, தனுஷ் மீது குற்றம் சாட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதில் அவர், என்னுடைய netflix ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது.

-விளம்பரம்-

நயன் அறிக்கை:

இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களையும் ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று கூறியிருந்தார். இதை அடுத்து நயன்தாரா- தனுஷ் விவகாரம் குறித்த செய்தி தான் பேசும் பொருளாகி இருக்கிறது. இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவின் ஆவணப்படத்தின் சிறப்பு காட்சி செய்தியாளர்களுக்கு திரையிடப்பட்டிருந்தது.

தனுஷ் குறித்த காட்சி:

அதில், தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டது தொடர்பான காட்சி இடம் பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் தனுஷ் குறித்த காட்சியும் அதில் இடம்பெற்றிருக்கிறது. ராதிகா, தனுஷ் கால் செய்து எப்படி படம் போகுது என்று கேட்டார். நானும் நன்றாக இருக்கிறது என்றேன். உடனே அவர், உங்களுக்கு விஷயம் தெரியுமா? என்று கேட்டார். நான், என்னன்னு கேட்டதற்கு, நயன் – விக்னேஷ் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்களாம் என்று சொன்னவுடன் என்னால் நம்பவே முடியவில்லை. பின் நான், அப்படியா! எனக்கு தெரியலையே என்று சொன்னதற்கு தனுஷ், உங்களுக்கு வெட்கம் இல்லையா? மூத்த நடிகையாக இருந்து இது கூடவா உங்களுக்கு தெரியவில்லை என்று சொன்னார். எனக்கு அப்படியே ஒரே அசிங்கமாக போய்விட்டது. தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement