கடந்த சில தினங்களாக சீரியல் நடிகை ரிஹானா விவகாரம் தான் தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கிறது. சின்னத்திரை சீரியல் மூலமா மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரிஹானா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் இதற்கு முன்பே சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த வாரம் ரிஹானா மீது சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணப்பன் என்ற தொழிலதிபர் மோசடி புகார் அளித்தார். அதில் அவர், ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால், அவரை விவகாரத்தை செய்யாமலே என்னை திருமணம் செய்து கொண்டார்.

இது எனக்கு லேட்டாக தான் தெரிந்தது. ரிஹானாவிற்கு நான் 18 லட்சம் கொடுத்து இருக்கிறேன். சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால் பலருடன் ரிஹானா பழகி வருகிறார். பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் இருந்து 18.5 லட்சத்தை ரிஹானா ஏமாற்றி இருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தார். இதை அடுத்து ராஜ் கண்ணப்பன் அளித்த புகாரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதை அடுத்து ரிஹானாவும் பதிலுக்கு ராஜ் கண்ணன் மீது புகார் அளித்திருக்கிறார். அதில், என்னிடமிருந்து சுமார் 15 லட்சத்திற்கும் மேல் பிசினஸ் செய்வதாக சொல்லி பணம் வாங்கி இருக்கிறார். அவர் சொல்வதெல்லாம் பொய் என்று கூறியிருந்தார்.
ரிஹானா விவகாரம்:
இப்படி இருக்கும் நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக அளித்த பேட்டியில் ரிஹானா, நான் தொழில் தொடங்குவதற்காக தான் ராஜ் கண்ணனிடம் என்னுடைய நகையை வைத்து 20 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்தேன். அந்த பணத்தை அவன் திருப்பிக் கொடுக்கவே இல்லை. என்னை ஏமாற்றிவிட்டான். தனக்கு தெரியாமலேயே என்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டார் என்று கூறியிருந்தார். அவருடைய உண்மையான பெயர் ராஜ் கண்ணன் இல்லை, அழகர்சாமி. அவருடைய சொந்த ஊர் பெசன்ட் நகரில் இருக்கிறது. அங்கு அவர் மீது பல வழக்குகள் இருக்கு. அவருடைய காரில் பெரிய கத்தி இருப்பதை பார்த்து நான் ரொம்பவே பயந்து விட்டேன். இவனிடம் என் பணம் இருக்கிறதே, அது எப்படி வாங்குவது என்று தெரியாமல் தான் நான் காதலிப்பது போல நடிக்க ஆரம்பித்தேன்.
https://www.youtube.com/watch?v=wBBob1l2SKE
ரிஹானா பேட்டி:
கொஞ்ச நாள் இப்படியே நடித்துவிட்டு நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை வாங்கிவிடலாம் என்று நினைத்து தான் அவனிடம் தொடர்ந்து நடித்திருந்தேன். அவன் உடல் ரீதியாக என்னை பலமுறை அப்யூஸ் செய்தான். நடிப்பாக இருந்தாலும் அவன் மீது இருந்த பயத்தால் நான் அதற்கு ஒப்புக்கொண்டேன். எப்படியோ போராடி அவனிடம் நான் கொடுத்த பணத்தில் 8 லட்ச ரூபாயை திரும்ப வாங்கி விட்டேன். என்னுடைய மீதி பணத்தை எப்படியாவது வாங்குவது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். அந்த பணம் எனக்கு ரொம்பவே முக்கியம். அதை நான் ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதித்து சேர்த்து வைத்த பணம். அந்த பணத்தை திருப்பி வாங்குவதற்காக அவனின் பிறந்த நாள் அன்று கேக் வாங்கிக் கொண்டு போனேன்.

சர்ச்சை பற்றி சொன்னது:
அன்று எனக்கும் அவனுக்கும் சண்டை வந்து அங்கிருந்து நான் கிளம்பி விட்டேன். ஆனால், அவன் என் காரை பின்தொடர்ந்து வந்தான். வீட்டுக்கு வந்து என்னை அசிங்கப்படுத்தி விடுவானா? எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இரவு முழுவதுமே நான் காரில் சுற்றிக் கொண்டே இருந்தேன். ஒரு கட்டத்தில் நான் மனம் வெறுத்துப் போய்விட்டேன். இதற்கு மேல் இவன் கூட இருந்தால் அவமானப்பட்டு சாக வேண்டும் என்று
விஜே சித்ரா போல நானும் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நினைத்து தற்கொலை முடிவு எடுத்தேன். அப்போது நான், இதற்கு மேல் என்னால் உன்னுடன் போராட முடியாது.
https://www.youtube.com/watch?v=aaVmNmpsx7g
அனுபவித்த கஷ்டங்கள்:
என் வாழ்க்கையை நானே முடித்துக் கொள்கிறேன். என்னுடைய குழந்தைகளை பார்த்துக்கொள். என் பணத்தை வைத்து என்னுடைய குழந்தைகளை நன்றாக பார்த்துக் கொள் என்று வாய்ஸ் மெசேஜ் அனுப்பினேன். அதற்கு அவன், எப்பொழுது செத்துப் போவா என்று கேட்டான். அதற்கு பிறகு தான் இவனுக்காக நாம் ஏன் சாகனும் என்ற எண்ணம் வந்தது. என் குழந்தைகளை நினைத்து அந்த முடிவை நான் மாற்றிக் கொண்டேன் என்று எமோஷனலாக கூறியிருக்கிறார்.






