தமிழில் விஷால் அறிமுகமான ‘செல்லமே ‘ படத்தில் அறிமுகமானவர் நடிகை ரீமா சென், 1981ஆம் ஆண்டு கொல்கத்தாவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். கொல்கத்தாவில் பள்ளிப்படிப்பை முடித்த ரீமா சென் மும்பையில் தனது கல்லூரி படிப்பை முடித்தார். அதன்பின்னர் மாடலிங் துறையில் சில காலம் இருந்தார் ரீமா சென். உண்மையை சொல்லப் போனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரீமா சென் மற்றும் திரிஷா இருவருக்கும் வித்யாசம் கண்டுபிடிக்க முடியாமல் தான் இருந்திருக்கும்.
90ஸ் கிட்ஸ் பலர் திரிஷாவும் ரீமா சென்னும் அக்கா தங்கைகள் என்று தான் நினைத்தார்கள் என்பது தான் உண்மை. நடிகை ரீமா சென் மின்னலே படத்திற்கு பின்னர் 2001ஆம் ஆண்டு மாதவனுக்கு ஜோடியாக மின்னலே படத்தில் நடித்தார். இந்த படத்தில் நடிப்பதற்கு ரீமா சென்னுக்கு சிறந்த அறிமுக நடிகை விருது கிடைத்தது. அதன்பின்னர் பகவதி, தூள், செல்லமே, கிரி, திமிரு, வல்லவன் ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்தார்.
ரீமா சென் தமிழில் நடித்த கிட்டத்தட்ட அனைத்து படங்களுமே ஹிட் படங்கள் தான். கடைசியாக ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்து வந்தார்.இறுதியாக விக்ரம் நடித்த ராஜபாட்டை படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
ரீமா சென் கடந்த 2012 ஆம் ஆண்டு சட்டம் ஒரு இருட்டறை படத்திலும் நடித்து இருந்தார், இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. நடிகை ரீமா சென் கடந்த 2012 ஆம் ஆண்டு சிவ் கரண் சிங் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.திருமனமான அடுத்த ஆண்டே இந்த தம்பதியற்கு கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த குழந்தைக்கு ருத்ரவீர் சிங் என்று பெயர் சூட்டினர். சமீபத்தில் நடிகை ரீமா சென் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.