விடாமுயற்சி படம் பற்றி நடிகை ஜெரினா கஸான்ட்ரா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டங்களில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது அஜித் அவர்கள் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ‘விடா முயற்சி’ படத்தில் நடித்திருக்கிறார்.

இந்தப் படத்தில் அஜித்துடன் த்ரிஷா, ஜெரினா கஸான்ட்ரா, அர்ஜுன்,ஆரவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசை அமைத்திருக்கிறார். சமீபத்தில் தான் இந்த படத்தின் முதல் சிங்களான ‘சவதீகா’ பாடல் படத்தின் பயங்கர ட்ரெண்டிங் ஆனது. அறிவு எழுதி இருக்கும் இப்பாடலை பாடகர் ஆண்டனிதாசன் பாடியிருந்தார். இந்தப் பாடல் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டதாகும்.
விடாமுயற்சி படம்:
இப்படம் முதலில் பொங்கல் அன்று ரிலீஸ் ஆக இருந்த நிலையில், சில காரணங்களால் ரிலீஸ் தள்ளி போனது. தற்போது இப்படம் வருகின்ற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகயுள்ள நிலையில் படத்தின் வெளியீட்டு உரிமையை பெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரெஜினா, அஜித் சார் இயக்குனரிடம் என்னை பற்றி கொடுத்த கமெண்ட் எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது.

ரெஜினா பேட்டி:
இந்த கதாபாத்திரம் கிடைத்தது நினைத்து ரொம்ப சந்தோஷம். மகிழ் சார் இயக்கத்தில் நடிக்கிறதை நான் ரொம்பவே என்ஜாய் பண்ணினேன். என்னை டைரக்டரின் ஆக்டர்ன்னு சொல்லலாம். சார் கொடுத்த அந்த கதாபாத்திரத்துக்கு என்னுடைய பெஸ்ட் கொண்டுவர நான் ரொம்பவே உழைத்தேன். நான் கதை கேட்கும் போது வேறொரு கதாபாத்திரத்தை எனக்கு சொன்னார்கள். அதற்கு பிறகு தான் இப்ப நடித்திருக்கிற கதாபாத்திரம் பற்றி சொன்னார்கள். என்னுடைய படங்களில் அதிகமாக ஆக்சன் இருக்க வேண்டும் என்று விரும்புவேன்.
https://www.youtube.com/watch?v=Jm5Gti9eeF8
நடிகர்கள் பற்றி சொன்னது:
எனக்கு ஆக்ஷன் ரொம்பவே பிடிக்கும். அதனால் தான் ஸ்டண்ட் காட்சிகளை விரும்பி செய்கிறேன். அதேபோல் அர்ஜுன் சார் படத்தில் எந்த அளவிற்கு கஷ்டப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கிறார் என்று எல்லோருக்குமே தெரியும். ஒரு கஷ்டமான காட்சியில் அவர் சிங்கிள் டேக்கில் நடித்து முடித்தார். சுற்றி இருந்த எல்லோருமே ஆச்சரியமாக பார்த்தோம். திரையில் பார்ப்பதை தாண்டி நேரில் அவருடைய ஆக்சன் காட்சிகள் பார்ப்பதற்கு அவ்வளவு ரசிக்கும் வகையில் இருக்கிறது. மேலும், திரிஷா ரொம்ப ஃபண்ணான நபர். அவர்களிடம் நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

படத்தின் கதை:
இத்தனை வருடம் அவர் கேரியரில் பல தடைகளை உடைத்து இருக்கிறார். சொல்லப்போனால், ட்ரெய்லரிலேயே படத்தின் கதை முழுவதாக தெரியும். படம் பார்த்த பிறகு ட்ரைலர் பார்க்கும்போது கதை என்னனு புரிந்து கொள்வார்கள். ட்ரெய்லரிலேயே படத்தினுடைய கதைக்கான குழு இருக்கும். அதைப்பற்றி பலருமே பேசவில்லை. ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் அற்புதமான வேலையை படத்திற்கு செய்திருக்கிறார். நான் அவருடைய பெரிய பேன் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.






